எங்கே சென்றாலும்.. இதை மட்டும் விடமாட்டார் போல மா.சு. டெல்லி நாடாளுமன்றம் முன்பு செம்ம!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எங்கே சென்றாலும், நடைபயிற்சி மேற்கொள்வதை விடவே மாட்டார். அந்த வகையில் டெல்லி சென்றுள்ள அவர், நாடாளுமன்ற கட்டிடம் அருகில் காலையிலேயே மூச்சிறைக்க ஓடிக்கொண்டிருந்தார். இந்த வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார்.

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் காலையில் உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை உலகிற்கே உணர்த்தி வருகிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வயது 61. இவர் இளைஞர்களை போல் தினசரி மாரத்தானில் கலந்து கொள்வார். கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வார், தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பாடுவார்,.

சாதனைகள்

சாதனைகள்

இவரது வீடியோக்களை பார்தால் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஊக்கம் யாருக்கும் கிடைக்கும். பல கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்கிறார். ஒட்டப்பந்தய சாதனைகள் பல படைத்திருக்கிறார். குக்கிராமங்களுக்கு சென்றாலும், நகரங்களுக்கு சென்றாலும் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் நிச்சயம் மேற்கொள்வார்.

13 கோரிக்கைகள்

13 கோரிக்கைகள்

அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலை டெல்லி சென்றார். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி திறப்பு, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். எச்.எல்.எல் தடுப்பூசி மையத்தை (செங்கல்பட்டு தடுப்பூசி மையம்) உடனடியாகத் திறக்க வேண்டும் உள்பட 13 கோரிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியாவை சந்தித்து வைக்க உள்ளார்

ஓட்டப்பயிற்சி

ஓட்டப்பயிற்சி

அதற்காக நேற்று மாலையே டெல்லி வந்த அவர், இன்று காலை டெல்லியில் உடற்பயிற்சியை மேற்கொண்டார். நீண்ட தூரம் மூச்சிறைக்க நாடாளுமன்ற கட்டிடம் அருகே ஓடியபடி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாதுகாப்பு மிகுந்த ஆள் ஆரவாரம் இல்லாத அந்த பகுதியில் ஓட்டபயிற்சி மேற்கொண்டார்.

பாராட்டு

பாராட்டு

சுகாதாரத்துறை அமைச்சர் என்பவர் உடல் நலத்தை பேணுவத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் இருக்க வேண்டும். அந்த வகையில் தான் மா.சுப்பிரமணியன் இருப்பதாக ட்விட்டரில் அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+