தொகுதி சீரமைப்பு-இன்றும் தமிழக எம்பிக்கள் போராட்டம்- கவனம் ஈர்த்த 'டி சர்ட்'- நாடாளுமன்றம் முடக்கம்!
டெல்லி: தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று 2-வது நாளாக தமிழக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது நீதியான தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்! என்பது உள்ளிட்ட வாசகங்களுடனான டி சர்ட் அணிந்து தமிழக எம்பிக்கள் முழக்கம் எழுப்பியது கவனம் ஈர்த்தது.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்படும் என்பது தமிழகத்தின் குமுறல். இதற்காக தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வரும் 22-ந் தேதி கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் விவாதிக்க வேண்டும் என திமுக உட்பட தமிழக எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். ஆனாலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவாதிக்க மறுத்து வருகிறது.
மத்திய அரசின் இந்த போக்கைக் கண்டித்து டெல்லியில் நேற்று திமுக எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகளின் எம்பிக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
#WATCH | Delhi | DMK MPs Kanimozhi, T Siva, along with party MPs, hold protest on the issue of delimitation, in Parliament House premises pic.twitter.com/dKUwzdt752
— ANI (@ANI) March 20, 2025
இன்று 2-வது நாளாகவும் மத்திய அரசு விவாதத்துக்கு அனுமதி மறுத்தது. இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்ட தமிழ்நாட்டு எம்பிக்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக 2-வது நாளாக கண்டனப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது நீதியான தொகுதி மறுசீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்தும் வாசகங்களுடன் கூடிய டி சர்ட்டை அனைத்து எம்பிக்களும் அணிந்து முழக்கங்கள் எழுப்பினர்.
நாடாளுமன்றத்திலும்..
நாடாளுமன்றத்திலும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தும் டி சர்ட் அணிந்தபடி தமிழக எம்பிக்கள் கூட்டத் தொடரில் பங்கேற்றனர். மேலும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடத்த கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளும் முடங்கின.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications