பள்ளிகளில் ‛டிராப்அவுட்’.. குஜராத்தை விட தமிழ்நாடு ‛பெட்டர்’.. ஆனாலும் 6வது இடம்..வெளியான ஷாக் தகவல்
இந்தியாவில் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவ-மாணவிகளின் விபரத்தை மத்திய கல்வித்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். இதில் துவக்க பள்ளி மாணவ-மாணவிகள் ‛டிராப்அவுட்’டில் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது.
டெல்லி: இந்தியாவில் பள்ளிகளில் படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ‛டிராப்அவுட்'டில் மாநிலங்கள் வாரியான பட்டியலை நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை இணைஅமைச்சர் சுபாஷ் சர்க்கார் வெளியிட்டார். இதில் உத்தர பிரதேசம், பீகார், குஜராத்தை ஒப்பிடும்போது தமிழ்நாடு சிறப்பாக இருந்தாலும் கூட, நமது மாநிலம் இந்தியாவில் 6வது இடத்தில் உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ல் துவங்கியது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை(லோக்சபா), மாநிலங்களவை(ராஜ்யசபா) என இரு சபைகளிலும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. எம்பிக்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த பதில்களை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வழங்கி வருகின்றனர்.

கல்வி அமைச்சர் பதில்
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எம்பி பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் ஏஏ ரகீம் ஆகியோர் சார்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது நாட்டில் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவ-மாணவிகளின் விபரங்களை அவர்கள் கேட்டு இருந்தனர். இதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் 12.53 லட்சம் பேர் ‛டிராப்அவுட்’
நாடு முழுவதும் மொத்தம் 12.53 லட்சம் மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். இதில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதாவது 6.97 லட்சம் மாணவர்களும், 6.22 லட்சம் மாணவிகளும் பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர். இதில் துவக்கப்பள்ளி படிப்பை 5 லட்சத்து 2 ஆயிரத்து 771 மாணவர்களும், 4 லட்சத்து 27 ஆயிரத்து 728 மாணவிகளும், 32 மூன்றாம் பாலினத்தவர்களும் கைவிட்டுள்ளனர்.

6வது இடத்தில் தமிழ்நாடு
6 வயது முதல் 14 வயது நிரம்பிய மாணவர்கள் துவக்கி பள்ளி பயில்வோர் என எடுத்து கொள்கிறோம். இதில் முதலிடத்தில் உத்தர பிரதேசம் உள்ளது. அங்கு அதிகபட்சமாக 3 லட்சத்து 96 ஆயிரத்த 655 பேர் பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர். 2வது இடத்தில் பீகார் உள்ள நிலையில் அங்கு 1 லட்சத்து 34 ஆயிரத்து 252 பேரும், 3வது இடத்தில் உள்ள குஜராத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 885 பேரும் துவக்கப்பள்ளியிலே ‛டிாராப்அவுட்' ஆகியுள்ளனர். இந்த பட்டியலில் 4வது இடத்தில் அசாம் உள்ளது. அங்கு 80 ஆயிரத்து 739 பேரும், 5வது இடத்தில் உள்ள ஹரியானாவில் 22,841 பேரும், 6வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 352 பேரும் துவக்க பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர்.

5வது இடத்தில் ஆந்திரா
மேல்நிலை பள்ளி படிப்பை மொத்தம் 3.22 லட்சம் பேர் கைவிட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 350 மாணவர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 126 மாணவிகளும், 12 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். இதில் மாநிலம் வாரியாக பார்த்தால் மத்திய பிரதேசம் 84,788 மாணவ-மாணவிகளும் முதலிடத்தில் மோசமான நிலையில் உள்ளது. 54,634 பேருடன் 2வது இடத்தில் ஒடிசாவும், 48,795 பேருடன் அசாம் 3வது இடத்திலும் 36,522 பேருடன் குஜராத் 4வது இடத்திலும், 20,443 பேருடன் ஆந்திரா 5வது இடத்திலும் உள்ளது.

மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை
மேலும் மாணவ-மாணவிகளின் படிப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு மாநில அரசுகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறையின் சமக்ரா சிக்சா திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதோடு மாணவ-மாணவிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டில் இருந்து சமூக மற்றும் பொருளாதார அளவில் பாதித்த 16 முதல் 19 வயதுக்கு உட்பட்டு பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. படிப்பை நிறைவு செய்ய மற்றும் படிப்புக்கான பொருட்கள் மற்றும் சான்றிதழ்களை பெற உதவிடும் வகையில் இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது. என்றும் அவையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
ஒடுக்கப்படும் தென்னிந்தியாவின் குரல்? 850ஆக உயரும் லோக்சபா தொகுதிகள்.. வடமாநிலங்களின் மெகா ஆதிக்கம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications