Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசின் பிஎல்ஐ திட்டம்.. தமிழ்நாடு தான் முதலிடம்.. குஜராத், கர்நாடகா அடுத்தடுத்த இடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் சுயசார்பு இந்தியா இலக்கை அடையவும் ஏற்றுமதியை ஊக்குவிக்க 2021-ல் அறிமுகம் செய்த பிஎல்ஐ திட்டம் மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கு தான் அதிக பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்காகவும், புதிய வேலைவாய்ப்புகளை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்றும், சுயசார்பு இந்தியா என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு பிஎல்ஐ திட்டத்தை அறிமுகம் செய்தது.

Tamil Nadu to get lions share of PLI investments, Gujarat, Karnataka next

இந்த பிஎல்ஐ திட்டம் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு, குஜராத் மறறும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கு அதிக பலன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கிரிஸ்டல் மார்கெட் இன்டலிஜென்ஸ் மற்றும் அனலாசிஸஸ் ஆராய்ச்சி அறிக்கையின்படி, "பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ஏசிசி பேட்டரி, சோலார் PV, டெக்ஸ்டைல்ஸ், மொபைல்கள், உணவு பதப்படுத்துதல், டெலிகாம், வெள்ளை பொருட்கள், ஐடி வன்பொருள் மற்றும் மருத்துவ சாதனங்கள்- ஆகிய முக்கிய துறைகள் 1.28 லட்சம் கோடி முதலீடுகளை இந்தியா ஈரக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இவற்றில் மூன்றில் ஒரு பங்கு முதலீடுகள், அதாவது ரூ.42,000 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக 36,000 கோடி அளவிற்கு அதாவது 28 சதவீதம் முதலீட்டை குஜராத் மாநிலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் விஸ்ட்ரான் போன்ற உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களிடமிருந்து ஏற்கனவே முதலீடுகளை கர்நாடகா ஈர்த்துள்ளது.இதன்படி 11 சதவீதம் அளவிற்கு அதாவது ரூ.14,000 கோடி அளவிற்கு முதலீட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அனைத்து இந்திய மாநிலங்களும் சேர்ந்தே, குறிப்பிட்ட 9 முக்கிய துறைகளில் இருநது 28 சதவீதம் அளவிற்கு ரூ 36,000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது..

இந்த ஒன்பது துறைகளில், ஏசிசி பேட்டரி முதலீடு தான் மிகப்பெரியது. அந்த தொழிலில் உள்ள சாதகமான வளர்ச்சி நிலைகளை பார்த்தால் ரூ. 52,000 கோடி மதிப்புள்ள முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தத் துறை சார்ந்த பி.எல்.ஐ.யில், தமிழ்நாடு மொத்த மதிப்பில் 67 சதவீதத்தை, அதாவது ரூ.35,000 கோடியை பெரும் என்றும், கர்நாடகா மற்றும் குஜராத் தலா 17 சதவீதம் (ரூ. 9,000 கோடி) பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பெரிய பிஎல்ஐ திட்டத்தில் உள்ள சோலார் பிவி துறையில் மொத்தம் ரூ.32,000 கோடி அளவிற்கு இந்தியாவில் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 76 சதவீத முதலீடுகளை (ரூ. 24,000 கோடிக்கு மேல்) கைப்பற்றியுள்ள குஜராத் , மிகப்பெரிய வெற்றிகரமான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக உள்ளது. சோலார் பிவி துறையில் மீதமுள்ள 24 சதவீதம் அளவிற்கு முதலீடு ஆந்திராவுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவுளி மற்றும் மொபைல் செல்போன் போன்ற பிற முக்கிய துறைகளில், தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அதிக முதலீட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிஸ்டல் மார்கெட் இன்டலிஜென்ஸ் மற்றும் அனலாசிஸஸ் (CRISIL MI&A) இன் இயக்குனர்-ஆராய்ச்சியாளர் ஹெட்டல் காந்தியின் கூறும் போது, பிஎல்ஐ திட்டம் மெதுவாகத் தொடங்கப்பட்டாலும், செல்போன் உற்பத்தி மற்றும் மருந்துப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட சில துறைகளில் நல்ல மாற்றங்கள் வந்துள்ளது.

இந்த பிஎல்ஐ திட்டம் 2020-21 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் இப்போது இந்தியாவில் உச்சத்தை எட்டியிருக்க வேண்டும். அத்துடன் 2025-26க்குள் அதன் நோக்கத்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் என்ன பிரச்சனை என்றால்,உலகின் சிலி பெரிய தொழில் நிறுவனங்கள் இன்னும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

சில நிறுவனங்கள் தங்கள் தொழில் நடவடிக்கைகளை பிஎல்ஐ திட்டத்தின் கீழ் இன்னமும் தொடங்கவில்லை. இதன் காரணமாக பிஎல்ஐ திட்டம் நினைத்தபடி இலக்குகளை எட்டவில்லை. 2026-27 ம் ஆண்டில் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை கிடைக்கும். இந்த பிஎல்ஐ திட்டம் குறைந்தபட்சம் 2028-29 வரை தொடரும் என்றும் நாங்கள் நினைக்கிறோம்" இவ்வாறு ஹெட்டல் காந்தி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+