டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு 89-வது கூட்டம்- நவம்பர் மாத நீர் திறப்பு குறித்து ஆலோசனை!
டெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காவிரியில் நவம்பர் மாதம் கர்நாடகா அரசு, தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீர் அளவு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக்கில் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டன. காவிரி ஒழுங்காற்று குழுவானது கர்நாடகாவில் பெய்யும் மழை அளவு , கர்நாடகா அணைகளில் நீர் மட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீரை திறக்க வேண்டும் என பரிந்துரைக்கும். இந்த பரிந்துரையை பரிசீலிக்கும் காவிரி மேலாண்மை ஆணையம் இதனடிப்படையில் கர்நாடகாவுக்கு உத்தரவிடும். இதுதான் நடைமுறை.

காவிரி நீர் திறப்பு உத்தரவு: இதனடிப்படையில் கடந்த அக்டோபர் 13-ந் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடிநீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அக்டோபர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 30-ந் தேதி வரை இந்த நீரை திறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடகாவோ வழக்கம் போல சொற்பமான நீரையே தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டுள்ளது.
மண்டியா போராட்டம்: மேலும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் 2 மாதங்களாக தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மண்டியா மாவட்டத்தில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடும் அணைகளில் ஒன்றான கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஒரு சொட்டு நீரைக் கூட தமிழ்நாட்டுக்கு திறக்கவே கூடாது என்பதை வலியுறுத்தி மண்டியா விவசாயிகள் 2 மாதங்களாக பல்வேறு பொராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் தொடருவதால் அங்கு பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்: இந்த நிலையில்தான் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. வீனித் குப்தா தலைமையில் இந்த ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு, நவம்பர் மாதம் திறக்க வேண்டிய நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்படும். இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த உத்தரவை பிறப்பிக்கும்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications