தீவிர கண்காணிப்பில் கொரோனா ஹாட்ஸ்பாட் லிஸ்ட்.. 170 மாவட்டங்களில் தமிழகம்தான் முதலிடம்
டெல்லி: நாடு முழுவதும் 170 மாவட்ட கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களாக கண்டறியப்பட்ட நிலையில் அதிக மாவட்டங்களுடன் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் அதிகம் பாதித்த மாநிலங்களின் எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் லாக்டவுன் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும 170 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. அந்த மாவட்டங்களில் ஹாட்ஸ்பாட் பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்தது.

353 மாவட்டங்கள்
207 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. அது போல் 353 மாவட்டங்களில் பாதிப்பே இல்லை என அறிவித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகத்தில் 22 ஹாட்ஸ்பாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

22 ஹாட்ஸ்பாட்
அவற்றில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் அல்லது கொரோனா அதிகம் பரவும் சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வெள்ளை மண்டலம்
அதாவது 15 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டதால் அந்த மாவட்டம் ஹாட்ஸ்பாட்டாக கருதப்படுகிறது. தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், ஆகிய 9 மாவட்டங்கள் வெள்ளை மண்டலங்களாக கருதப்படுகிறது. ஏனைய மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம்
கொரோனா அதிகம் பரவும் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் அதிக மாவட்டங்களை பெற்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக 14 மாவட்டங்களுடன் மகாராஷ்டிரா அடுத்த இடத்தில் உள்ளது. இங்கு மும்பை, புனே, தானே, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது போல் உத்தரப்பிரதேசத்தில் 13 மாவட்டங்களும், ராஜஸ்தானில் 12 மாவட்டங்களும், ஆந்திராவில் 11 மாவட்டங்களும், டெல்லியில் 10 மாவட்டங்களும் கொரோனா பாதித்த ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு ஏப்ரல் 20-ஆம் தேதி பிறகு சில அத்தியாவசிய பணிகளுக்காக கட்டுப்பாடுகள் ஏதும் தளர்த்தப்படாது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!











Click it and Unblock the Notifications