தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி குறைந்துவிட்டது.. டெல்லிக்கு பயணம் செய்தது ஏன்? பிடிஆர் விளக்கம்!
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி குறைந்துவிட்டதாக பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
டெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு சார்பாக ஒதுக்கப்படும் நிதி குறைந்து கொண்டே வருவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல், நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுக்கு கடன் வாங்க வேண்டிய தேவையில்லை என்று கூறிய அவர், மத்திய அரசிடம் கூடுதல் நிதி தொடர்பான கோரிக்கைகள் வைக்கவில்லை என்று தெரிவித்தார்.
2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும்.
இந்த நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து நிதியமைச்சக அதிகாரிகளை சந்தித்தார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
இதனைத்தொடர்ந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கடந்த முறை டெல்லிக்கு வந்த போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து சில கோரிக்கைகள் வைத்தேன். அதில் சிலவற்றில் முன்னேற்றம் உள்ளது. பொருளாதார அளவில் சர்வதேச கவனம் இந்தியா மீது உள்ளது. இந்த சூழலில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளில், மத்திய அரசுக்கு சில பங்குள்ளது. முன்மொழிவுகளுக்கான அனுமதி, போக்குவரத்து அனுமதி உள்ளிட்டவற்றில் மத்திய அரசின் பங்கு உள்ளது. தற்போதும் சில கோரிக்கைகள் முன் வைத்துள்ளேன். அதில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்ஜெட்
அதேபோல், வரும் திங்கட்கிழமை தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. அதன்பின், கடந்த ஆண்டுகளில் படிப்படியாக வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். நடப்பாண்டிலும் அதே வழியில் பயணிக்க உள்ளோம். ஆனால், மார்ச் 31ம் தேதிக்குள் கடன் வாங்கும் எல்லை எண்ணிக்கை முதலில் ஒரு எண் சொல்லப்பட்டு பிறகு அது வேறு எண்ணாக தமிழ்நாட்டுக்கு குறைக்கப்பட்டது. திடீரென குறைக்கப்பட்ட எல்லையே தமிழ்நாட்டிற்கு போதுமானது என்றாலும், நமது உரிமையை இழந்துவிடக்கூடாது என்பதற்காக சில தெளிவுகளை அளிக்க வந்துள்ளேன்.

கடன் வாங்கும் எல்லை
மாநிலங்கள் கடன் வாங்குவதற்கு மத்திய அரசு நிர்ணயித்த தொகை அருகே தமிழ்நாடு அரசு வரப் போவதில்லை. ஆனால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டால், கடன் வாங்குவதற்கான தேவை உருவாகும். அதனால் ஏற்கனவே இருந்த கடன் வாங்கும் எல்லையை கைவிடாமல் இருக்க சில ஆலோசனை செய்யப்பட்டது. அதில் நிதித்துறை செயலாளர், எது நியாயமோ அது செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு குறைப்பு
தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை வைக்கவில்லை. சட்டப்படி எங்களுக்கு வர வேண்டியது வருகிறதா என்பதை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி குறைந்துக் கொண்டே செல்கிறது. உற்பத்தியில் மத்திய அரசிடம் வர வேண்டிய பங்கில் ஒரு சதவிகிதம் வரை குறைந்துள்ளது. 10 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதி குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications