"ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்குக" ஜனாதிபதியை நாளை சந்திக்கும் எம்பி-க்கள்.. திமுக முக்கிய மனு!
டெல்லி: ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நாளை சந்தித்து தமிழ்நாடு பிரதிநிதிகள் மனு அளிக்க உள்ளனர். சட்ட அமைச்சர் ரகுபதி, திமுக எம்பி-க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர். இளங்கோ, வில்சன் ஆகியோர் நாளை குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.

நடப்பாண்டில் தமிழ்நாட்டின் சட்டசபை கூட்டம் ஜனவரி 9ம் தேதி தொடங்கியது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான வார்த்தைகளை உச்சரிக்க மறுத்து கடந்து சென்றார்.
அதேபோல் சில வாசகங்களை அவராகவே சேர்த்து உரையாற்றினார். இதற்கு சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, தீர்மானமும் கொண்டு வந்தார். இதனால் சட்டசபையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.
ஆளுநரின் மரபு மீறிய செயலுக்கு விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஆளுநர் விவகாரத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஜன.9ம் தேதி மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஏற்கனவே ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக சார்பாக சட்ட ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் திமுக சார்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க உள்ளனர். இதற்காக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்பி ஆ.ராசா ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அதேபோல் தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோரும் டெல்லியில் உள்ளனர். நாளை காலை 11.45 மணியளவில் குடியரசுத் தலைவரை திமுக நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications