சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் ஜாமீன் மனு- குஜராத் அரசு 2 நாளில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த உலகை உலுக்கிய மதவன்முறைகளில் அப்போதைய மாநில முதல்வரும் தற்போதைய பிரதமருமான மோடியை தொடர்புபடுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் (டீஸ்டா செதல்வாத், தீஸ்தா செதல்வாட்) ஜாமீன் மனு மீது குஜராத் மாநில அரசு 2 நாட்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மதகலவரம் வெடித்தது. இந்த மதவன்முறையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலக நாடுகளை உலுக்கியது குஜராத் மத வன்முறைகள்.

2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் வன்முறைகளின் போது காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் மோடி உட்பட 64 பேர் மீது குற்றமும் சாட்டப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது.
சிறப்பு புலனாய்வுக் குழுவானது மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து ஈசான் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். இது தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்த உச்சநீதிமன்றம், மோடி உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வுக் குழு விடுதலை செய்ததை கடந்த ஜூன் 24-ந் தேதி உறுதி செய்தது.
அதேநேரத்தில் 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை வழக்குகளில் மோடியை தொடர்புபடுத்தி சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியதாக டீஸ்டா செதல்வாட்டை அதிரடியாக கைது செய்தது சிறப்பு புலனாய்வுக் குழு. டீஸ்டாவுடன் முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரும் கடந்த ஜூன் 25-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.
இவ்வழக்குகளில் தங்களுக்கு ஜாமீன் கோரி டீஸ்டா, ஶ்ரீகுமார் தாக்கல் செய்த மனுவை அகமதாபாத் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து டீஸ்டா செதல்வாட், ஶ்ரீகுமார் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 25-ந் தேதிக்குள் குஜராத் அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று டீஸ்டா, ஶ்ரீகுமார் ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் குஜாரத் அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குஜராத் அரசின் பதில் மனு தயாராக உள்ளது; ஆனால் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது உள்ளது. ஆகையால் கால அவகாசம் தேவை என கோரினார். அப்போது நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்தர பட், சுதான்ஷு துலியா ஆகியோர், மனுதாரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றே உங்கள் பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இனைத் தொடர்ந்து நாளை மறுநாள் சனிக்கிழமைக்குள் குஜராத் அரசின் பதில் தாக்கல் செய்யப்படும் என்றார் துஷார் மேத்தா. இதனைத் தொடர்ந்து 2 நாட்களில் குஜராத் அரசின் பதில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications