டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திரிபுரா பாணியில் ஆந்திராவில் பாஜக அதிரடி.. முக்கிய தலைவர் ஓட்டம்.. அதிர்ச்சியில் தெலுங்குதேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lanka dinakar joins bjp | திரிபுரா பாணியில் ஆந்திராவில் பாஜக அதிரடி, அதிர்ச்சியில் தெலுங்குதேசம்

    டெல்லி: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்சியைச் சேர்ந்த வே 4 எம்பிக்கள் பாஜகவில் இணைந்த நிலையில், நாயுடுவுக்கு நெருக்கமான லங்கா தினகர், தெலுங்குதேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை காலி செய்து அந்த இடத்தில் பாஜக அமர துடிக்கிறதோ என்ற சந்தேகம் ஆந்திராவில் இப்போது ஏற்பட்டுள்ளது.
    ஏனெனில் அண்மையில் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த 4 மாநிலங்களவை எம்பிக்கள் பாஜகவில் இணைந்தனர். அதுவும் சந்திரபாபு நாயுடு குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற நேரத்தில் இப்படி ஒரு சம்பவத்தை பாஜக செய்துமுடித்தது. இதனால் சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சியல் உள்னார்.

    ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி, மக்களவை தேர்தலில் இதுவரை இல்லாத ஒரு தோல்வி என்ற மோசமான தோல்வியால் துவண்டு போய் கிடக்கும் தெலுங்குதேசம் கட்சிக்கு மற்றொரு மிகப்பெரிய அடி பாஜகவில் இருந்து விழுந்துள்ளது.

    பாஜகவில் தெ.தேசம் தலைவர்கள்

    பாஜகவில் தெ.தேசம் தலைவர்கள்

    சந்திரபாபு நாயுடுவுக்கு மிக நெருக்கமானவரும், தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளருமான லங்கா தினகர், தனது கட்சி பொறுப்பை திடீரென நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தையும் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பிவிட்டார்.

    பாஜகவில் இணைந்தார்

    பாஜகவில் இணைந்தார்

    அதன்பின்னர் லங்கா தினகர், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயல் தவைர் ஜேபி நட்டா முன்னிலையில் இணைந்தார். இதேபோல் இந்திய தேசிய லோக் தள் ராஜ்ய சபா எம்பி ராம்குமார் காஷ்யப் மற்றும் முன்னாள் எம்பி அப்துல்லா குட்டி ஆகியோரும் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

    பாஜக தலைமை அதிரடி

    பாஜக தலைமை அதிரடி

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை மொத்தமாக வளைத்து பாஜகவை வளர்க்க முடிவு செய்துவிட்டதோ என்று அந்த மாநில மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஏனெனில் வரிசையாக தெலுங்கு தேசம் கட்சியினர் பாஜகவில் இணைந்து வருவது தான் காரணம்.

    மேற்கு வங்க பாணி

    மேற்கு வங்க பாணி

    முனனதாக திரிபுராவில் இதேபோல் தான் எதிர்க்கட்சியாக பலவீனமான நிலையில் இருந்த காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை கூண்டோடு பாஜகவுக்கு தாவ வைத்து அங்கு ஆட்சியை பிடித்தது. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை வளைத்து வலிமையானஎதிர்க்கட்சியாக மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ந்துள்ளது.

    சுமூகமான முதல்வர்கள்

    சுமூகமான முதல்வர்கள்

    இதன் காரணமாக அதே ஆயுதத்தை ஆந்திராவின் மீது பாஜக வீசியிருக்கலாம் என நம்பபப்டுகிறது. இதனிடையே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாஜக தலைமையுடன் நெருக்கமான நட்பையும் சுமூகமான உறவையும் பேணி வருதால் அவர்களின் கட்சிகளுக்கு இதுவரை எந்தபிரச்னையும் ஏற்படவில்லை என்கிறார்கள் அரசியல் வட்டாத்தில்...

    English summary
    Telugu Desam Party spokesperson Lanka Dinakar joined the BJP in the presence of its working president JP Nadda at party headquarters in New Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X