இந்தியாவில் என்ட்ரி ஆகும் டெஸ்லா.. மலிவு விலை கார் எவ்வளவாக இருக்கும்? போட்டி நிறுவனங்கள் தாங்குமா
டெல்லி: எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை தொடங்கியுள்ள நிலையில், டெஸ்லா கார்களுக்கான இறக்குமதி வரி குறைப்புக்கு பின் அந்த கார்கள் இந்தியாவில் என்ன விலையில் விற்பனை ஆகும் என்பது பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. டெஸ்லாவின் மிக மலிவு விலை மாடல் கார் கூட பல முன்னணி கார்களின் விலையை விட கூடுதலாக உள்ளது.
அமெரிக்காவின் முன்னணி எலக்ட்ரானிக் கார் உற்பத்தி நிறுவனம் டெஸ்லா. உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா கார், பல்வேறு நாடுகளில் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இந்த டெஸ்லா நிறுவன கார்கள் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. இந்தியாவில் இறக்குமதி வரி அதிமாக இருப்பதாக எலான் மஸ்க் கூறி வந்தார்.

டெஸ்லா கார்களின் விலை என்ன
இதற்கிடையே, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் நுழைவதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 13 பணிகளுக்கு ஆள் எடுக்கும் அறிவிப்பையும் டெஸ்லா வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இறக்குமதி வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்லா கார்கள் இந்தியாவில் எவ்வளவு விலை இருக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ரூபாய் 35 - 40 லட்சம்
சர்வதேச கேபிடல் மார்க்கெட் நிறுவனமான CLSA வெளியிட்டுள்ள மதிப்பீட்டின் படி, டெஸ்லா நிறுவனத்தின் மலிவு விலை காரான டெஸ்லா, இந்திய சந்தையில் ரூ.35 லட்சம் முதல் 40 லட்சமாக இருக்கும். டெஸ்லாவின் மலிவு விலை மாடல் கார் அமெரிக்காவில் 35 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.30.4 லட்சம்) ஆக உள்ளது. இந்த கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்யும் போது சாலை வரி, இன்ஸுரன்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்து சுமார் 35-40 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விலைக்கு டெஸ்லா தனது கார்களை விற்கும் பட்சத்தில், ஏற்கனவே இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மஹிந்திரா XEV 9e, ஹூண்டாய் e-Creta, மருதி சுசூகி e-Vitara ஆகிய கார்களின் விலையை விட 20-50 சதவிகிதம் கூடுதலாக டெஸ்லா கார்கள் இருக்கும். இதனால், இந்திய மின்சார கார் சந்தையில் டெஸ்லா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பையில் அறிமுகம்
ஒருவேளை டெஸ்லா தனது என்ட்ரி லெவல் மாடல் காரின் விலையை 25 லட்சத்திற்கும் கீழ் குறைத்தால் இந்திய சந்தையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் அளவுக்கு இந்தியாவில் இன்னமும் எலக்ட்ரிக் கார் விற்பனை சூடுபிடிக்கவில்லை.
எனவே, டெஸ்லா கார் இந்தியாவில் அறிமுகம் ஆனாலும் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்றே அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் டெல்லி மற்றும் மும்பையில் தனது கார் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று சொல்லப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications