மோடி-எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பில் தம்பிதுரை இல்லையே கவனிச்சீங்களா?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை உடனில்லை என்பது பரபரப்பு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கஜா புயல் நிவாரண நிதி உதவி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உடன் இல்லை. இவர் அதிமுகவின் டெல்லி முகமாக இருப்பவர். சீனியர் தலைவரும் கூட.

இப்போது சந்திப்பதில்லை
தம்பிதுரை கடந்த சில மாதங்கள் முன்புவரை, முதல்வர்-பிரதமர் சந்திப்பு காலகட்டங்களில் உடன் இருந்து வந்தவர். ஆனால், சமீபகாலமாக மோடியுடனான, எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்புகளில், தம்பிதுரை இருப்பது கிடையாது. இன்று பிரதமரை தம்பிதுரை சந்தித்தபோதும், எடப்பாடி பழனிச்சாமி உடன் இல்லை.

கடும் விமர்சனங்கள்
இவ்வாறு தம்பிதுரை, பிரதமருடனான சந்திப்பை தவிர்க்க காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக, மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் தம்பிதுரை. இதன் காரணமாகத்தான், பிரதமருடான சந்தி்ப்பில் தம்பிதுரை இல்லை என்று கூறப்படுகிறது.

ஹிந்தி திணிப்பு, நிதி உதவி
மத்திய அரசு ஹிந்தியை புகுத்துகிறது, தமிழக அரசுக்கு நிதி கொடுப்பதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை தம்பிதுரை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகிறார்.

மத்திய அமைச்சர் பதில்
இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்டபோது, தம்பிதுரைதான் இதற்கு பதிலளிக்க வேண்டும். ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறியிருந்தார்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications