லடாக் விவகாரம்.. இந்திய கோரிக்கையை ஏற்க மறுத்த சீனா.. 13-வது பேச்சுவார்த்தை தோல்வி.. என்ன நடந்தது?
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் தனது வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த வரிசையில் இணைந்து கொண்ட சீனாவும் இந்திய எல்லையை அபகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
அருணாச்சல பிரதேச மாநில எல்லையை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினர் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

லடாக் எல்லையில் மோதல்
கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.

பலகட்ட பேச்சுவார்த்தை
இதனை தொடர்ந்து லடாக் எல்லையில் பெரும் பதற்றம் உண்டானது. இதன் பின்பு லடாக் எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதனால் ஓரளவு நல்ல பயன் கிடைத்தது. பதற்றமான பகுதிகளில் கூடுதலாக குவிக்கப்பட்டு இருந்த இரு நாடு படை வீரர்களும், அவர்களின் ராணுவ டாங்கிகளும் விலக்கிக் கொண்டன. முதலில் 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.
Recommended Video

நல்ல முன்னேற்றம்
இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே கடைசியாக 12-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது லடாக் எல்லையில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து தங்களது படைகளை விலக்கி கொள்ள முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு மிக நல்ல முன்னேற்றம் கிடைத்தது.

பேச்சுவார்த்தை தோல்வி
இந்த நிலையில் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 13-வது பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7 மணி வரை சுமார் 9 மணி நேரம் நீடித்தது. எல்லை பகுதிகளில் மீதமுள்ள இடங்களில் இரு தரப்பு படைகளை விலக்கி கொள்வதற்காக இந்தியா ஆக்கபூர்வமான வாதங்களை முன்வைத்தது. இரு தரப்பின் நிலையை மாற்றுவதற்கான சீனாவின் ஒருதலைப்பட்ச முயற்சிகளை இந்தியா சுட்டிக்காட்டியது. ஆனால் இந்திய தரப்பின் கோரிக்கையை சீனத் தரப்பு ஏற்கவில்லை என்றும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை ராணுவ அதிகாரிகள் சிலர் கூறினார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications