மணமேடையில்.. மணமகன் முன்பு.. மணப்பெண்ணை தூக்கிய நபர்.. அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்.. வீடியோ வைரல்!
டெல்லி: நமது பாரத தேசத்தில் திருமண விழாக்கள் என்றாலே அது ஒரு தனி கொண்டாட்டமாக இருக்கும். மற்ற நாடுகளை போல் அல்லாமல் திருமணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இந்தியர்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில கலாசாரத்துக்கு ஏற்ப திருமண விழாக்கள் களைகட்டுவது வழக்கம்.

களைகட்டும் திருமண விழா
அனைத்து மாநிலங்களிலும் மத, மொழி, இன கலாசாரத்துக்கு ஏற்ப திருமண விழாவில் சடங்குகள் மேற்கொள்ளப்படும். இப்படி ஒரு திருமண விழாவில் நடைபெற்ற சடங்கு முறைதான் மணப்பெண்ணின் கோபத்தை தூண்டி ஏழரையை கூட்டியுள்ளது. பொதுவாக வட இந்தியாவில் திருமண விழாக்களில் ஜெய்மாலா என்னும் சடங்கு முறை கடைபிடிக்கப்படும்.

ஜெய்மாலா சடங்கு
அதாவது மாலை வேளையில் மணமகனை அவரது நண்பர்கள் கொஞ்சம் உயரமாக தூக்குவார்கள். மணப்பெண்ணின் நண்பர்களும் அவரை அதை விட உயரமாக தூக்குவார்கள். அப்போது இருவரும் மாலை அணிவிப்பதில் சிரமம் ஏற்படும். இந்த குறும்புத் தனமான ஜெய்மாலா சடங்கு திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ரசனையாக இருக்கும்.

மணபெண்ணை தூக்கிய நபர்
இந்த நிலையில் வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ஜெய்மாலா சடங்கு நடந்தது. மணமக்கள் இருவரும் கையில் மாலையுடன் நிற்கின்றனர். அப்போது மணமகனை ஒருவர் தூக்குகிறார். இதனை தொடர்ந்து மணபெண்ணையும் அங்கு இருந்த ஒருவர் செண்டு தூக்காக தூக்கினார். அப்போது மணமக்கள் இருவரும் உயரத்தில் இருந்தபடியே மாலையை மாற்றினார்கள்.

வீடியோ வைரல்
இதன் பின்னர் சிறிது நேரத்தில் மணபெண்ணை கீழே இறக்கி விட்டார் அந்த நபர். அப்போது மணப்பெண் திடீரென தன்னை தூக்கிய நபரின் கண்ணத்தில் பளார் என அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர் திட்டியபடியே அங்கிருந்து கோபமாக சென்றார். அதாவது அந்த நபர் தன்னை தூக்கியது மணப்பெண்ணுக்கு பிடிக்கவில்லை. இதனால்தான் அவரை அறைந்துள்ளார். மணப்பெண் அந்த நபரை அறைந்துபோது மணமகனின் ரியாக்ஷன் மிகவும் பரிதாபமாக இருந்தது. இந்த வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications