'ரத்ததானம்' செய்ய அனுமதியுங்கள்.. சுப்ரீம் கோர்ட்டை நாடிய 'திருநங்கைகள்'.. மத்திய அரசின் நிலைப்பாடு?

திருநங்கைகளும் ரத்த தானம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருநங்கைகளும் ரத்த தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழக்கிறார்கள் எனில் அதில் ஒரு உயிரிழப்பு இந்தியாவில்தான் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்கையில் விபத்துக்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. இருப்பினும், அதிகரிக்கும் வாகனங்கள் எண்ணிக்கை, போதுமான சாலை வசதிகள் இல்லாதது போன்ற காரணத்தினால் விபத்துக்கள் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது. ஆனால் விபத்திலிருந்து மக்களை காப்பாற்ற ரத்த தானம் பெரிதும் உதவுகிறது.

ஆனால் ரத்த தானம் செய்வதற்கும் சில அடிப்படை தகுதிகள் இருக்கின்றன. அதாவது பச்சை குத்திக்கொண்டவர் 6 மாதங்கள் கழித்து ரத்த தானம் செய்ய வேண்டும். அதேபோல காது அல்லது மூக்கு குத்திகொள்பவர்கள் 24 மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்யலாம். பல் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் ஒரு மாதம் கழித்து ரத்த தானம் செய்யலாம். இது தவிர மஞ்சள் காமாலை, காசநோய் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யமுடியாது.

 வழக்கு

வழக்கு

இந்நிலையில் இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆகியோர் ரத்த தானம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. உலகின் பல நாடுகளில் இந்த தடை அமலில் இருக்கிறது. இந்நிலையில் திருநங்கைகள் ரத்த தானம் செய்வதை அங்கீகரிக்க வேண்டும் என்று மணிப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது.

 பிரமாண பத்திரம்

பிரமாண பத்திரம்

இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை இன்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறது. அதில், "மூன்றாம் பாலினத்தவர்கள்(திருநங்கைகள் உட்பட), தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது" என கூறியுள்ளது. மேலும், "நமது அரசியலமைப்பு சட்டத்தில் ரத்த தானம் செய்பவர்களுக்கான வரையறைகளை வகுத்திருக்கிறது. இதில் மேற்குறிப்பிட்டவர்கள் வருகின்றனர். மட்டுமல்லாது இவர்களுக்கு எச்ஐவி, ஹெபடைடிஸ் பி அல்லது சி ஆகிய தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

காரணம்

காரணம்

எனவே இவர்களிடமிருந்து ரத்தம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் மட்டுமல்லாது போதைக்காக ஊசி பயன்படுபவர்களிடமிருந்தும் ரத்தம் எடுக்க முடியாது" என்று கூறியுள்ளது. ஆனால், ஒருவரின் பாலின அடிப்படையில் ரத்த தானம் செய்யக்கூடாது என்று தடுப்பது முறையல்ல என மனுதாரர் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது இது அறிவியலுக்கு புறம்பானது என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே இது தொடர்பான வழக்கு விசாரணை விரைவில் வர இருக்கிறது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் திருநங்கைகள் அதிக அளவில் பாலியல் தொழிலில்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக பல திட்டங்களை அறிவித்தாலும் இந்த திட்டங்கள் பெரும்பாலான திருநங்கைகளுக்கு போய் சேர்வதே கிடையாது. எனவே இந்த வழக்கு விசாரணையில் திருநங்கைகளின் வாழ்க்கை தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+