Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியில் தான், டெல்லியில் நினைவு கூறத்தக்க மாற்றங்கள் நடந்தது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இருதய கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The death of Sheila Dikshit .. President Ramnath, Prime Minister Modi deeply condolences

இந்நிலையில் ஷீலா தீட்சித்தின் மறைவு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லியின் முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் பிரமுகருமான திருமதி ஷீலா தீட்சித் மறைவை கேட்டு வருத்தமாக உள்ளது.

அவர் பதவியில் இருந்த காலம் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. அதற்காக அவர் என்றும் நினைவில் வைக்கப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ஷீலா தீட்சித் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவர் அன்பு மற்றும் ஆளுமை போன்ற குணங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர். தலைநகர் டெல்லியின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+