ரிலையன்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தம் ரத்து.. மத்திய அரசு அதிரடி. பரபர பின்னணி
டெல்லி: இந்திய கடற்படைக்கு தேவையான போர்க்கப்பல்களை கட்டித்தருவதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. 5 போர் கப்பல்களை கட்டித்தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
ரோந்துப்பணிகள் மேற்கொள்வதற்காக இந்திய கடற்படைக்க 5 போர் கப்பல்களை கட்டித்தர முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில், மத்திய அரசு டெண்டர் விட்டது.
இதில் வெற்றி பெற்ற குஜராத்தை சேர்ந்த 'பிபவாவ் டிபன்ஸ் அண்ட் ஆப்ஷோர் என்ஜினீயரிங் லிமிடெட்' நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி மதிப்பில் மத்திய அரசு 2011ம் ஆண்டில் ஒப்பந்தம் போட்டது.

போர்க்கப்பல் ஒப்பந்தம்
இதனிடையே நிகில் காந்தி என்பவரால் நடத்தப்பட்ட ‘பிபவாவ் டிபன்ஸ் அண்ட் ஆப்ஷோர் என்ஜினீயரிங் லிமிடெட்' நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு கைமாறியது. மேலும் அந்த நிறுவனத்தின் பெயரும், ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் என மாற்றம் செய்யப்பட்டது. இதன்காரணமாக இந்திய கடற்படைக்கு போர் கப்பல்களை கட்டும் ஒப்பந்தமும், பணியும் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் நிறுவனத்தின் வசம் வந்தது.

கால தாமதத்தால் ரத்து
ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் போர் கப்பல் களை கட்டித்தராமல் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் நிறுவனம் தாமதப்படுத்தி வந்தது.. இதன் காரணமாக போர் கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு 2 வாரங்களுக்கு முன் ரத்து செய்துள்ளது. அந்த தகவல் தற்போது தான் கசிந்துள்ளது.

நிதி நெருக்கடியில் தவிப்பு
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், ரூ.11 ஆயிரம் கோடி கடன்களால் தவித்து வருகிறது. கடன்களை தீர்ப்பதற்கான பணியில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், இந்திய கடற்படைக்கு கப்பல் கட்டித்தரும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது, ரிலையன்ஸ் குழுமத்தின் கடன்களை தீர்க்க தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இந்திய நிறுவனங்கள் ஆர்வம்
நிதி பிரச்சனை காரணமாக தவிக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் வசம் உள்ள ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் நிறுவனத்தை கையகப்படுத்திக்கொள்வதற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 12 கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications