டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி, பஞ்சாப், உத்தரகண்ட், ஜம்மு...வடமாநிலங்களில் தொடர் நிலநடுக்கம்...வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில்இன்று இரவு 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
இதேபோல் டெல்லி, ஜம்மு, உத்தரகண்ட்மற்றும் நொய்டாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில்இன்று இரவு 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. மேலும் தலைநகர் டெல்லி, ஜம்மு ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் உத்தரகண்ட் மாநிலம் மற்றும் நொய்டா நகரிலும் நிலடுக்கம் உணரப்பட்டுள்ளது.வடமாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

The quake struck in Amritsar, Punjab. The quake affected Delhi, Jammu, Uttarakhand and Noida

இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் செய்தி வெளியிட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் அல்லது பஞ்சாபின் பிற பகுதிகளில் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் உயர் அதிகாரிகள், பஞ்சாப் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அமிர்தசரஸில் உள்ள வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பவன் நகர் பகுதி மக்கள் இந்த நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது என்று கூறி உள்ளனர். தஜிகிஸ்தானை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறியுள்ளது.

English summary
The quake struck at 10.30 pm tonight in Amritsar, Punjab. It is reported to be 6.1 on the Richter scale. The quake affected Delhi, Jammu, Uttarakhand and Noida
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X