கொரோனா தடுப்பூசி.. இணையதளம் இல்லாத கிராம மக்களை பற்றி மத்திய அரசு யோசித்ததா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு "கோவின்" இணையதளத்தில் முன்பதிவு செய்து இருக்க வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது, ஆனால், கிராமத்தில் இருக்கக்கூடிய தொலைபேசி, இணையதள சேவை வசதி உள்ளிட்ட எதுவும் இல்லாத ஒரு சாமானியன் இதை எப்படி செய்வான் என மத்திய அரசு யோசித்தது உண்டா என உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று மத்திய அரசுக்கு சரமாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

வழக்கு விசாரணை
நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்குவது தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

கோவின் ஆப்
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இணையதள சேவை இல்லாமல் எப்படி கோவின் ஆப்பில் பதிவு செய்து கிராம மக்கள் தடுப்பூசி செலுத்த முடியும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இணையதளம் இல்லையே
கிராமப்புற மக்களுக்கு இணையதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இருக்காதே, இணையதள சேவைகள் அனைத்து கிராமங்களிலும் இல்லையே, அவர்கள் எப்படி தடுப்பூசி போடுவார்கள் என்ற கேள்விக்கு, வீட்டிலுள்ள பிறர், நண்பர்கள், என்ஜிஓக்கள், அரசு அதிகாரிகள் உதவியோடு அவர்கள் ரிஜிஸ்டர் செய்யலாம் என்று மத்திய அரசு சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

நடந்தே போனார்களே
இது நிஜமாக நடக்க கூடியதா, புலம் பெயர் தொழிலாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்தே சென்றார்களே, அப்படியான நிலைமையில் இருப்போர், நீங்கள் கூறுவதை போல இணையத்தில் பதிவு செய்ய முடியும் என நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications