மதமாற்ற விவகாரம் தொடர்பான மனுக்கள்.. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: மதமாற்றம் தொடர்பான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறவுள்ளது. அந்த மாநிலங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மதமாற்றம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மதமாற்ற தடுப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த சட்டத்துக்கு எதிராக சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீதான விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
இதில், மோசடி செய்து மதமாற்றம் செய்வதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வலியுறுத்தி அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது கடந்த 2023 ஜனவரி மாதம் விசாரணை நடைபெற்றது. அப்போது, மதமாற்றம் என்பது கவலைக்குரிய விஷயம். இந்த விஷயத்தில் அரசியல் சாயம் பூசக் கூடாது என்று அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம். மேலும், இந்த மனு தொடர்பாக மனுதாரர் விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை அச்சுறுத்தும் விதமாக குற்ற வழக்கில் சிக்கவைக்கும் வகையில், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டதாக ஜமாயித் உலாமா ஏ ஹிந்த் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள், அலகாபாத் நீதிமன்றத்தில் 5 மனுக்கள், மத்திய பிரதேசத்தில் 7 மனுக்கள், கர்நாடகம், உத்ரகாண்டில் ஒரு மனு என பல்வேறு மனுக்கள் நிலைவியில் உள்ளது.
மதமாற்றம் தொடர்பாக இதுபோன்று பல்வேறு மனுக்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டப் பிரிவுகளு்கு தடை விதித்த உயர்நீதிமன்றங்களின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக மாநில அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் நிலுவையில் உள்ளன.
அந்த மாநிலங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மதமாற்றம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications