டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களவை தேர்தலில் எதிர்பாராத அடி.. தோல்வி முகம் காணும் முக்கிய அரசியல் புள்ளிகளின் வாரிசுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இத்தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்களின் முக்கிய வாரிசுகள் தோல்வி முகம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாக கவனிக்கப்படுகிறது

சோனியா காந்தியின் மகனும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி துவங்கி இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது இத்தேர்தல் முடிவுகளால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசு அரசியல் சுணக்கம் கண்டுள்ளது

தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக இருந்தாலும் இத்தேர்தலில் களமிறங்கிய பல அரசியல் வாரிசுகள் தங்களது கவுரவத்தை காப்பாற்றி கொள்ள எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பர் அந்த அளவுக்கு பல்வேறு பிரபலங்களின் வாரிசுகள் இத்தேர்தலில் தோல்வியை நோக்கி சென்றுள்ளனர்

எப்படி ஒரு கஷ்ட காலம் பாருங்க.. திமுக வரலாற்றிலேயே இதுதான் கசப்பான வெற்றி! எப்படி ஒரு கஷ்ட காலம் பாருங்க.. திமுக வரலாற்றிலேயே இதுதான் கசப்பான வெற்றி!

அமேதியில் தோல்வி முகம் காணும் ராகுல்

அமேதியில் தோல்வி முகம் காணும் ராகுல்

சோனியாவின் அரசியல் வாரிசான காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளார். 12 லட்சம் வாக்குகள் பெற்ற அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான அமேதியில் ஸ்மிருதி இரானியை விட குறைவான வாக்குகளை பெற்று தோல்வி முகத்தில் உள்ளார்

மத்தியபிரதேசத்தில் தோற்கும் அரசியல் வாரிசு

மத்தியபிரதேசத்தில் தோற்கும் அரசியல் வாரிசு

மத்திய பிரதேசத்தின் குனா தொகுதியில் போட்டியிடும் மாதவராவ் சிந்தியாவின் மகனும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான ஜோதிராதித்ய சிந்தியா தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரான கேபி யாதவை விட சுமார் 1 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை நோக்கி செல்கிறார்

சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன் சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன்

ராஜஸ்தானில் தோற்க போகும் வைபவ் கெலாட்

ராஜஸ்தானில் தோற்க போகும் வைபவ் கெலாட்

ராஜஸ்தானின் ஜோத்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்பட்ட அசோக் கெலாட்டின் மகனான வைபவ் கெலாட் தோல்வியை தழுவ உள்ளார் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரான கஜேந்திர சிங் ஷெகாவத்தை விட சுமார் 270000 வாக்குகள் பின்தங்கி தோல்வி படிகளில் ஏறிவருகிறார்

பாஜக அலையில் கரைய போகும் கவிதா

பாஜக அலையில் கரைய போகும் கவிதா

தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கவிதா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளரை விட தொடர்ந்து பின்தங்கியுள்ளார் இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் சுமார் 45000 என்ற அளவில் உள்ளது

தானும் கவிழ்ந்து.. நம்பி ஏறியவர்களையும் கவிழ்த்து விட்டு.. அதிமுகவின் அதி பரிதாப நிலை! தானும் கவிழ்ந்து.. நம்பி ஏறியவர்களையும் கவிழ்த்து விட்டு.. அதிமுகவின் அதி பரிதாப நிலை!

சாதிப்பாரா அன்புமணி ராமதாஸ்

சாதிப்பாரா அன்புமணி ராமதாஸ்

தருமபுரி மகக்ளவை தொகுதியில் போட்டியிடும் பாமக நிறுவனர் ராமதாஸின் மகனான அன்புமணி ராமதாஸ் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துளள்து ஏனெனில் காலை வாக்கு எண்ணிக்கை துவங்கிய போது முன்னிலை பெற்ற அவர் அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கிவிட்டார். எனினும் தற்போதைய நிலவரப்படி 30000 வாக்குகள் வரை பின்தங்கியிருந்த அவர் திமுக வேட்பாளருக்கு போட்டயளிக்கம் விதமாக 19000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை சுமலதாவிடம் தோற்ற நிகில் கவுடா

நடிகை சுமலதாவிடம் தோற்ற நிகில் கவுடா

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவி சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மண்டியா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்! கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்!

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவி சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மண்டியா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவி சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மண்டியா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல மும்பையின் தெற்கு பகுதியில் போட்டியிட்ட பிரபல அரசியல்வாதியும் தொழிலதிபருமான முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா மறைந்த கர்நாடக அரசியல்வாதியான பைரேகவுடாவின் மகனான கிருஷ்ணா பைரேகவுடாவும் பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கி தோல்வியடையும் நிலையில் உள்ளனர்

English summary
It is noteworthy that the main constituents of various political figures who are contesting in the election are faced with the defeat of the votes cast in the Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X