டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜம்மா மசூதியின் குரல்.. நாடு முழுக்க எதிரொலிக்கும்.. நான் வந்துவிட்டேன்.. சந்திரசேகர் ஆசாத் அறைகூவல்

டெல்லியில் ஜம்மா மசூதியில் நடக்கும் சிஏஏ போராட்டத்தின் குரல் நாடு முழுக்க எதிரொலிக்கும் என்று பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விடுதலையானார் சந்திரசேகர் ஆசாத் - வீடியோ

    டெல்லி: டெல்லியில் ஜம்மா மசூதியில் நடக்கும் சிஏஏ போராட்டத்தின் குரல் நாடு முழுக்க எதிரொலிக்கும் என்று பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.

    குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் ஜம்மா மசூதியில் கடந்த டிசம்பர் 21ம் தேதி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் அசாத் போராட்டம் நடத்தினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு ஜாமீன் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பெயிலில் வந்த இவர் தற்போது மீண்டும் டெல்லியில் ஜம்மா மசூதி அருகே போராட்டம் செய்து வருகிறார்.

    முறுக்கு மீசை.. ராவண கோஷம்.. பீம் ஆர்மி.. அரசை அதிர வைக்கும் சந்திரசேகர் ஆசாத்.. யார் இந்த இளைஞர்? முறுக்கு மீசை.. ராவண கோஷம்.. பீம் ஆர்மி.. அரசை அதிர வைக்கும் சந்திரசேகர் ஆசாத்.. யார் இந்த இளைஞர்?

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நான் மீண்டும் வந்துவிட்டேன். என்னுடைய போராட்டம் தொடரும். அமைதியான போராட்டம்தான் நம்முடைய பலம். எல்லா மதத்தை சேர்ந்த மக்களும் இங்கு இருக்கிறார்கள்.

    ஒற்றுமை

    ஒற்றுமை

    இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது என்பதற்கு இதுதான் சான்று. பல மதங்களை சேர்ந்த மக்கள் இங்கே வந்து இருக்கிறார்கள். இதுதான் இந்தியா. இப்போது அரசுக்கு தெரியும் இது வெறும் இஸ்லாமிய போராட்டம் இல்லை என்று.

    நாடு அரசு

    நாடு அரசு

    நம்முடைய நாட்டையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை. அதை நாங்கள் செய்கிறோம். ஜம்மா மசூதியில் இருந்து ஒரு குரல் எழுந்துள்ளது. அந்த குரல் கொடுக்கும் செய்தியை நாடு முழுக்க, உலகம் முழுக்க கொண்டு செல்லும். நாடு முழுக்க இந்த போராட்டத்தை நாங்கள் கொண்டு செல்வோம்.

    கொண்டு செல்வோம்

    கொண்டு செல்வோம்

    சிஏஏவிற்கு எதிராக ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு என் சல்யூட். இதை தீவிரமாக எதிர்த்து போராடி வரும் அலிகார்க் முஸ்லீம் பல்கலைக்கழகம் , ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், ஜேஎன்யூ அனைத்திற்கும் நன்றி, என்று சந்திரசேகர் ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    The whole country will listen to the voice of Jamma Mosque says Bhim Army Chandrashekar Azad .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X