பாஜகவில் தேர்தல் நடைமுறை இல்லவே இல்லை.. பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி
டெல்லி: பாஜகவின் முக்கிய பதவிகள், நிர்வாகிகள் தேர்தல் இன்றி பிரதமர் நரேந்திர மோடியின் அனுமதியுடன் நடப்பதாகவும், பாஜகவில் தேர்தல் மறைந்து போய்விட்டதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
Recommended Video
பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் சுப்பிரமணியசாமி. இவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக இந்திய பொருளாதார கொள்கை, இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு சுப்பிரமணியசாமி தனது கருத்துகளை கூறி வருகிறார்.

சுப்பிரமணியசாமி மீண்டும் விமர்சனம்
இந்நிலையில் தான் தற்போது மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். இந்த முறை பாஜகவில் தேர்தல் இன்றி நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால் பாஜகவின் தேர்தல் இல்லாத நிலை உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பாஜகவில் தேர்தலே இல்லை
‛‛ ஜனதா கட்சி மற்றும் பாஜகவின் துவக்க காலத்தில் நாங்கள் கட்சி மற்றும் நாடாளுமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்தோம். கட்சியின் அரசியலமைப்புக்கு இது நிச்சயம் தேவை. ஆனால் இன்று பாஜகவில் தேர்தல் இல்லை. ஒவ்வொரு பதவிக்கும் மோடியின் ஒப்புதலுடன் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுகிறார்'' என விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம் ஏன்?
இந்நிலையில் பாஜகவின் நாடாளுமன்ற குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாஜகவில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை இந்த குழு எடுக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர். புதிதாக கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் உள்பட 7 பேர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர்.

நிதின் கட்கரி நீக்கம்
அதேநேரத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழுவில் இருந்து மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாடாளுமன்ற குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிரா துணை முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜகவின் தேசிய பொது செயலாளர் பூபேந்திர யாதவ், ஓம் மாத்தூர், பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவரான தமிழகத்தை சேர்ந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி (சிஇசி) உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சுப்பிரமணியசாமி விமர்சனம் செய்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications