ஆதார் கார்டு முதல் ஓட்டுநர் உரிமம் வரை! ஜூன் 1 முதல் மாறும் மாற்றங்கள்! லைசென்ஸ் பெற இனி 8 போடணுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜூன் 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை மத்திய அரசு நிறைய மாற்றங்கள் செய்துள்ளது.

இன்னும் 3 நாட்களில் இந்த மாற்றங்கள் எல்லாம் நடைபெற போகிறது. எல்பிஜி சிலிண்டர், வங்கி விடுமுறை, ஆதார் இலவசமாக அப்டேட் செய்வது, டிராபிக் விதிகள் ஆகியவற்றில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மாற்றங்கள் நடைபெறுகின்றன.

aadhar card driving license delhi

முன்பு இருந்ததை விட தற்போது விதிகள் கடுமையானதாக இருக்க போகிறது. புதிய ஆண்டு பிறந்து 5 மாதங்களான நிலையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது சாமானியர்களின் பட்ஜெட்டில் துண்டு விழும் அளவுக்கு இருக்கும் என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. என்னென்ன மாற்றங்கள் நிகழ போகிறது என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம்: எண்ணெய் நிறுவனங்கள் மாதாமாதம் முதல் தேதியில்தான் கேஸ் சிலிண்டர்களின் விலைகளில் மாற்றங்களை செய்கின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் காலை 6 மணிக்கு இந்த விலை மாற்றம் வெளியாகிறது. ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை அன்று காலை வெளியிடப்பட்ட விலை பட்டியலின்படியே இருக்கும்.

ஆதார் அட்டை புதுப்பிப்பது: அது போல் ஆதார் அட்டை புதுப்பித்தல் தொடர்பான தகவல்களை UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான தேதி ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 14 ஆம் தேதி வரை கட்டணம் இல்லாமல் இலவசமாக ஆதார் அட்டையில் உள்ள தகவல்களில் மாற்றம் செய்துக் கொள்ளலாம்.

இந்த சலுகை ஆன்லைன் மாற்றத்திற்கு மட்டுமே, ஆஃப்லைனில் புதுப்பிக்க ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பிக்க வேண்டும். அங்கு ஒரு மாற்றத்திற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்: ஜூன் 1 முதல் போக்குவரத்து விதிகளில் மாற்றங்கள் ஏற்பட போகிறது. ஜூன் 1 முதல் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்றும் டிரைவிங் லைசென்ஸை தயார் செய்யலாம். புதிய விதியின் படி ஆர்டிஓவிடம் சென்று தேர்வு எழுதத் தேவையில்லை. அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் நிறுவனத்தில் இருந்தும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறலாம்.

ஜூன் 1 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ 25 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை: ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் என ஜூன் மாதம் 6 நாட்கள் விடுமுறை உள்ளது. அது மட்டுமல்லாமல் ஜூன் 15 ஆம் தேதி ராஜ சங்கராந்தி, 17 ஆம் தேதி எய்து உல் அதா ஆகியவை கொண்டாடப்படவுள்ளதால் இந்தியாவில் சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு விடுமுறையானது பொருந்தும். இவ்வாறு இத்தனை மாற்றங்கள் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது. இதற்கு இன்னும் 3 நாட்கள்தான் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+