திடீரென அழைத்த வி.பி.நரசிம்ம ராவ்! மன்மோகன் சிங் நிதியமைச்சராக பதவியேற்றது இப்படித்தான்!
டெல்லி: இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை மாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர் எப்படி நிதியமைச்சராக பதவியேற்றார் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதாவது, கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் இரவு ஒன்றில் மன்மோகன் சிங் வீட்டின் டெலிபோன் ஒலிக்கிறது. போனை மன்மோகன் சிங்கின் மருமகன் விஜய் எடுக்கிறார். மறுமுனையில் பேசியது பி.சி.அலெக்சாண்டர். ஐஏஎஸ் அதிகாரியான இவர் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அரசின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருந்தார். விஷயம் எதையும் குறிப்பிடாத அலெக்சாண்டர், மன்மோகன் எங்கே? என்றுதான் கேட்கிறார். அவர் தூங்கிக்கொண்டிருப்பதாக விஜய் சொல்ல, உடனடியாக அவரை எழுப்பி போனை கொடுக்க வேண்டும் என அலெக்சாண்டர் கேட்டுக்கொள்கிறார். தொலைப்பேசி உரையாடல் சில விநாடிகள் மட்டுமே நீடித்தன.

பின்னர் அலெக்சாண்டர், மன்மோகன் சிங்கை நேரில் சந்திக்கிறார். அப்போது, "பிரதமர் உங்களை நிதியமைச்சராக பொறுப்பேற்க கேட்கிறார். உங்களால்தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்" என்று அலெக்சாண்டர் கோரிக்கையை வைக்கிறார்.
இந்தியாவின் அப்போதைய பொருளாதார நிலைமை: பொதுத்துறையில் ஏகப்பட்ட இழப்புகள், எதுவும் திட்டமிட்டதை போல சரியாக போகவில்லை. இது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை ரூ.2,500 கோடியாக குறைந்தது. இந்த பணம் 2 வார இறக்குமதிக்கு கூட போதுமானதாக இல்லை. போதாத குறைக்கு உலக வங்கிகள் கடன் வழங்க மறுத்தன. அந்நிய செலாவணி வெளியேற்றம் அதிகமாக இருந்ததால் பணவீக்கம் உயர்ந்தது. இந்த சூழல் குறித்து மன்மோகனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. மட்டுமல்லாது, இந்த நேரத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் மன்மோகன் அறிந்திருந்தார்.
1991ம் ஆண்டு ஜூன் 21ம் தேதியன்று யுஜிசி அலுவலத்தில் இருந்த அவர், நேராக வீட்டிற்கு சென்று உடையை மாற்றிக்கொண்டு பதவியேற்பு பிரமானத்தில் பங்கேற்றார். நிதியமைச்சராவதற்கு முன்னர் மன்மோகன் சிங் யுஜிசி தலைவராக இருந்தார். சாதாரண யுஜிசி தலைவரை, நிதியமைச்சராக நியமிப்பது குறித்து பி.சி.அலெக்சாண்டர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் நரசிம்ம ராவ் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இப்படியாக மன்மோகன் சிங் பதவியேற்றார்.
மன்மோகன் சிங் இந்த சம்பவத்தை பின்னாட்களில் இவ்வாறு குறிப்பிடுகிறார். அதாவது, "பதவிப் பிரமாணம் செய்ய அணிவகுத்து நிற்கும் புதிய அணியில் என்னைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அங்கு நான் எந்த துறையின் அமைச்சர் என்று எனக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் நான் நிதியமைச்சராகப் போகிறேன் என்று நரசிம்மராவ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்" எனறு கூறியுள்ளார்.
பிரதமர் நரசிம்ம ராவ்வுக்கு மன்மோகன் சிங் எப்படி வலது கையாக இருந்து செயல்பட்டாரோ அதேபோல, மன்மோகனுக்கு ப.சிதம்பரமும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த சி ரங்கராஜன் ஆகியோரும் வலது கரமாக இருந்து பணியாற்றினர்.
இவர்கள் மூவரும் சேர்ந்து பல முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்தினர். அதில் முக்கியமானது, 18 துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளிலும் தொழில்துறை நீக்கம் மேற்கொள்ளப்பட்டது, 34 தொழில்களில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது, பல துறைகளில் பொதுத்துறை ஏகபோகம் முடிவுக்கு வந்தது மற்றும் அரசு நடத்தும் நிறுவனங்களில் அரசாங்கத்தின் பங்குகளை திரும்பப்பெற அனுமதித்தது போன்றவை முக்கியமானதாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications