இது கருத்து சுதந்திரம் கிடையாது.. திமுக எம்பியின் பேச்சால்.. ‘டென்ஷன்’ ஆன ராஜ்யசபா தலைவர்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மறுவரையறை மசோதா மீதான விவாதத்தின் போது திமுக எம்.பி அப்துல்லா, பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கரும் தனது அதிருப்தியை காட்டினார்.
ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019- திருத்த மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இடங்களை அதிகரிப்பது, எஸ்சி, எஸ்டி பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அம்சங்கள் இம்மசோதாவில் இடம் பெற்றிருந்தன. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த அதே நாளில் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் அமித்ஷா தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் ராஜ்யசபா எம்.பிக்கள் பேசினர். அப்போது, திமுக எம்பி எம்.எம். அப்துல்லா, நமது முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை வைப்பதை விட அவரது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் மிக முக்கியமானது என 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான குரலை பதிவு செய்தார்.
அப்போது தந்தை பெரியாரின் மேற்கோளை அப்துல்லா சுட்டிக்காட்டியது சபை குறிப்பில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திமுக எம்.பி அப்துல்லாவின் பேச்சுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ராஜ்யபா தலைவர் ஜெகதீப் தன்கர், இந்த அவை இதற்கு உடன்பட முடியுமா? இதை அமைதியாக கவனித்துக் கொண்டு இருக்க முடியுமா? இந்த தளத்தை(அவையை) அப்துல்லா தவறாக பயன்படுத்துகிறார் என்றார்.
மேலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திமுக எம்.பி, அவைத்தலைவர் தனது பேச்சை தவறாக புரிந்து கொண்டதாக வலியுறுத்தினார். உடனே குறுக்கிட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியும் இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறார்களா.. இதை எப்படி அவை கேட்டுக்கொண்டு இருக்கும்.
காங்கிரஸ் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும்" என்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.பியுமான கேசி வேணுகோபால், ராஜ்யசபா தலைவரிடம், பெரியார் அத்தகைய கருத்தை எந்த சூழலில் கூறினார் என்பதை சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த ஜெகதீப் தன்கர், "நாம் இந்த அவையில் எதை வேண்டும் என்றாலும் மேற்கோள் காட்டி பேசலாமா? தேசத்துரோகம், ஒருமைப்பாடு, நமது அரசியலைமைப்புக்கு எதிராக வரைக்கும் செல்ல முடியுமா?" என்றார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறுக்கிட்டு பேசினார். இதனால், அவையில் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி எம்.பிக்களுக்கும் இடையே கடும் கூச்சல் அமளி ஏற்பட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications