ப்பா.. என்ன மரியாதை.. என்ன கைதட்டல்.. ஹீரோ அபிநந்தனின் பெற்றோருக்கு மாஸ் வரவேற்பு- வீடியோ!
தங்கள் மகன் விமானி அபிநந்தனை வரவேற்க சென்னையில் இருந்து டெல்லி சென்ற அவரின் பெற்றோருக்கு மிகப்பெரிய அளவில் மரியாதையும், வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: தங்கள் மகன் விமானி அபிநந்தனை வரவேற்க சென்னையில் இருந்து டெல்லி சென்ற அவரின் பெற்றோருக்கு மிகப்பெரிய அளவில் மரியாதையும், வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கிறார். இன்று பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு பின் வாகா எல்லையில் இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்படுகிறார்.
பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்திய விமானி அபிநந்தனை வரவேற்க அவரது தந்தை வர்த்தமான், தாயார் ஷோபனா ஆகியோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டனர். டெல்லி வரும் அபிநந்தனை அவரது பெற்றோர்கள் வரவேற்க தயாராகி இருக்கிறார்கள்.
[Read more: விமானி அபிநந்தனை வரவேற்க கோலாகல ஏற்பாடு... பஞ்சாப் முதல்வர் நேரில் சென்று வரவேற்கிறார்]

விமானத்தில் வரவேற்பு
அபிநந்தனின் பெற்றோர் சென்னையில் விமானம் நிலையம் வந்தபோதே அவர்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு அவர்கள் விமானத்தில் ஏறிய போது மிகப்பெரிய அளவில் மக்கள் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். ஹீரோவை நாட்டிற்கு கொடுத்த பெற்றோர் என்று எல்லோரும் கைதட்டி அவர்கள் இருவருக்கும் விமானத்தில் வரவேற்பு அளித்தனர்.
|
டெல்லி விமான நிலையம்
அதேபோல் நேற்று நள்ளிரவில் டெல்லி விமான நிலையம் வந்த போதும் கூட இதே நிகழ்வுதான் நடந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அபிநந்தனின் பெற்றோருக்கு பல மக்கள் காத்து இருந்தனர். அதோடு விமானப்படையை சேர்ந்த சில அதிகாரிகளும் காத்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் விமானம் நிலையம் வெளியே வரும் வரை மக்கள் அவர்களுக்காக கரகோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

சிறப்பு பாதுகாப்பு
தற்போது அபிநந்தனின் பெற்றோர் சிறப்பு பாதுகாப்பில் இருக்கிறார்கள். விமானப்படையை சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்பிற்காக அவர்களுடன் இருக்கிறார்கள். டெல்லியை சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் அபிநந்தனின் குடும்பத்தை இன்று சந்திக்க உள்ளனர்.

எதிர்பார்ப்பு
தற்போது அபிநந்தனின் வருகைக்காகதான் எல்லோரும் டெல்லியில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அபிநந்தன் டெல்லி வருவதற்கு இன்று மாலை ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநந்தனை வரவேற்க டெல்லியில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications