எப்புட்றா! பஸ் டாப் மேல பைக் வந்துட்டு.. இவர்தான் ரியல் பாகுபலி.. வியந்து போன நெட்டிசன்கள்!
டெல்லி: தனி நபராக பேருந்தின் மேற்கூரைப் பகுதியில் தொழிலாளி ஒருவர் பைக்கை தலையில் சுமந்து ஏற்றிவிடும் காட்சி இணையத்தில் நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் நெட்டிசன்கள் பலரும் இவர்தான் உண்மையான பாகுபலி என்று பதிவிட்டு வருகின்றனர்.
இணையதளங்களில் ஏதாவது சுவாரசியமான வீடியோக்கள் அடிக்கடி டிரெண்ட் ஆகிக்கொண்டு தான் இருக்கும்.
பலரது அசாத்தியமான செயல்கள் மற்றும் திறமைகள் குறித்த வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் பகிரப்படும். அது குறித்த விவாதங்கள், கருத்துக்கள் என்று பகிர்ந்து அந்த வீடியோக்களை நெட்டிசன்கள் மேலும் டிரெண்டாக்கி விடுவர்.

இணையத்தில் பரவும் வீடியோ
அப்படித்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர், மோட்டார் சைக்கிள் ஒன்றை அசால்டாக தனது தலையில் சுமந்தபடி.. எந்தவித பிடிமானமும் இன்றி.. பஸ்ஸின் டாப்பில் தனி நபராக ஏற்றி வைக்கிறார். தனி நபராக எப்படி குறைந்தது 100 கிலோவுக்கு மேல் இருக்கும் மோட்டார் சைக்கிளை ஏற்ற முடியும் என்ற வியப்புடன் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

பேசன் ப்ரோ பைக்..
கோயம்பேடு பேருந்து நிலையங்களில் கூட பல தனியார் ஆம்னி பேருந்துகளில் இப்படி பைக்குகளை டாப் பகுதியில் ஏற்றும் தொழிலாளிகளை நாம் பார்த்து இருக்கக் கூடும். கயிறு கட்டி குறைந்து 2 பேராவது பைக்குகளை இப்படி டாப்பில் ஏற்றுவார்கள். இந்தக் காட்சிகளே வியக்கவைக்கும் அளவில் இருக்கும். ஆனால், இணையத்தில் பரவும் இந்த வீடியோவில், மிக சர்வ சதாரணமாக பஸ்சில் சாய்த்து வைக்கப்பட்டு இருக்கும் ஏணியை பிடித்தபடி பேசன் ப்ரோ பைக் ஒன்றை தலையில் சுமந்தபடி ஏணியில் ஒவ்வொரு அடியாக லாவகமாக எடுத்து வைக்கிறார்.

பிரபாஸ் சிவலிங்கத்தை தோளில் சுமப்பது போல
இந்த வீடியோக்கள் நெட்டிசன்களை வாய்பிளக்க வைத்துள்ளது. சில வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் நெட்டிசன் ஒருவர், "இவர்கள்தான் உண்மையான சூப்பர் மனிதர்கள்" என்ற கேப்ஷனுடன் பதிவிட்டு இருக்கின்றனர். பாகுபலி படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தை தோளில் தனிநபராக எடுத்துச் செல்லும் காட்சிகளோடு ஒப்பிட்டு இவர்தான் உண்மையான பாகுபலி என்றுநெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் இல்லை. நெட்டிசன்கள் பலரும் இவ்வளவு கடினமாக உழைக்கக் கூடிய இந்த தொழிலாளிக்கு நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், சில நெட்டிசன்கள், உண்மையிலேயேதான் இப்படி நடக்கிறதா.. இல்லை கிராபிக் காட்சிகளா? என்று வியந்து பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் இவ்வளவு எடையுடன் ஏணியில் ஏறுவதற்கு கண்டிப்பாக பல நாட்கள் பயிற்சி இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.

நெட்டிசன்கள் வியப்பு
மற்றொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், கண்டிப்பாக இதுபோன்ற கனமான சுமைகளை சுமக்க வலுவான கழுத்து தேவை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வெளியிடபப்ட்டு சில மணி நேரங்களில் ஆயிரக்கணககான வியூஸ்களை பெற்றுள்ளது. தனி நபராக பேருந்தின் மேற்கூரைப் பகுதியில் தொழிலாளி ஒருவர் பைக்கை தலையில் சுமந்து ஏற்றிவிடும் காட்சி இணையத்தில் நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications