வடசென்னை பட பாணியில்.. திஹார் ஜெயிலுக்குள்ளேயே "கேங்க் வார்".. துப்பாக்கி சூடு.. ரவுடி "தில்லு" பலி
டெல்லி: டெல்லி திஹார் ஜெயிலுக்குள் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பிரபல கேங்ஸ்டர் தில்லு தாஜ்பூரியா சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர் கும்பல் ஆட்கள் மூலம் தில்லு தாஜ்பூரியா சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார். எதிர் கேங்கை சேர்ந்த யோகேஷ் துண்டா மற்றும் அவரின் கூட்டாளிகள் மூலம் தில்லு தாஜ்பூரியா சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது? இன்று அதிகாலை திஹார் சிறையில் சுனில் மான் என்ற தில்லு தாஜ்பூரியாவை, யோகேஷ் துண்டா மற்றும் அவரது கும்பலை சேர்ந்தவர்கள் இரும்புக் கம்பியால் தாக்கினர். சரமாரியாக அவரை இரும்பு கம்பியால் அடித்து உள்ளனர்.
தில்லு தாஜ்பூரியாவின் ஆட்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் இன்று அதிகாலை ஜெயிலுக்குள் பெரிய கலவரமே ஏற்பட்டு உள்ளது. மாறி மாறி இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டு உள்ளனர்.
இந்த மோதலின் போது ஜெயில் உள்ளேயே வைத்து தில்லு தாஜ்பூரியாவையும் அவரின் ஆட்களையும் யோகேஷ் துண்டா மற்றும் அவரது கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.
பல நாள் திட்டமிட்ட பின் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பு தெரிவித்து உள்ளது.
கொலை காரணம்? இதையடுத்து உடனடியாக தில்லு தாஜ்பூரியா, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2021ல் ரோகினி கோர்ட் முன்பாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஜிதேந்தர் கொக்கி என்ற ரவுடி கொலை தில்லு தாஜ்பூரியா ஆட்கள் மூலம் செய்யப்பட்டார். கடந்த 2021 செப்டம்பர் 24ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.
கோர்ட்டுக்குள் வக்கீல் உடையில் வந்த தில்லு தாஜ்பூரியா ஆட்கள் கோர்ட்டுக்கு உள்ளேயே வைத்து ஜிதேந்தர் கொக்கி என்பவரை கொலை செய்தனர். இதையடுத்து போலீசார் அங்கேயே நடத்திய பதில் தாக்குதலில் தில்லு தாஜ்பூரியாவின் அடியாட்கள் கொலை செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரின் கேங்கிற்கும் இடையில் பல காலமாக இருக்கும் கேங் வார் காரணமாக அந்த கோர்ட் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. தில்லு தாஜ்பூரியா சொல்லித்தான் ஜிதேந்தர் கொக்கி என்பவரை கோர்ட்டில் வைத்து கொலை செய்துள்ளனர் போலீசார் அப்போதே இது தொடர்பாக பேட்டி அளித்து இருந்தனர்.
இதையடுத்து ஜிதேந்தர் கொக்கியின் ஆட்களான யோகேஷ் துண்டா மற்றும் அவரது கும்பலை சேர்ந்தவர்கள் இதற்கு பழி வாங்க வேண்டும் என்று இத்தனை காலம் காத்துகொண்டு இருந்தனர். இந்த நிலையில்தான் டெல்லி திஹார் ஜெயிலுக்குள் வைத்து தில்லுவை கொலை செய்துள்ளனர்.
எதிர் கேங்கை சேர்ந்த யோகேஷ் துண்டா மற்றும் அவரின் கூட்டாளிகள் மூலம் தில்லு தாஜ்பூரியா சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு முன்னதாக மிகப்பெரிய அளவில் ஜெயிலில் சண்டை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
தில்லு தாஜ்பூரியாவின் அடியாள் ஒருவரும் இதில் பலத்த காயம் அடைந்தார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திஹார் ஜெயிலுக்குள் பாதுகாப்பு கருதி தற்போது லாக்டவுன் போடப்பட்டு உள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications