காஷ்மீரில் பயங்கரவாதம் வெறியாட்டம்..32 மாதங்களில் 48 ராணுவ வீரர்கள் வீரமரணம்- என்னதான் நடந்தது?
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த 32 மாதங்களில் பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களில் நமது ராணுவ வீரர்கள் 48 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தியதில் 10 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
காஷ்மீரின் தோடாவில் நேற்று இரவு பயங்கரவாதிகளுடனான மோதலில் 4 வீரர்கள் வீரமரணத்தைத் தழுவி இருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் சிறிது காலம் அமைதி திரும்பியிருந்தது. ஆனால் அண்மை காலமாக தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த 78 நாட்களில் 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பயங்கரவாதிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் 2021-ம் ஆண்டு முதல் 32 மாதங்களில் நடத்தப்பட்ட முக்கியமான பயங்கரவாத தாக்குதல்கள் விவரம்:
2021 டிசம்பர்: பயங்கரவாதிகள் தாக்குதல்களில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
2022 மே: கத்ராவில் யாத்ரீகர்கள் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.
2023 ஏப்ரல்- மே : இருவேறு தாக்குதல்களில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
2023 நவம்பர்: பயங்கரவாதிகள் தாக்குதல்களில் 2 கேப்டன்கள் உட்பட 5 வீரர்கள் வீரமரணத்தைத் தழுவினர்.
2023 டிசம்பர் 21: காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல்களில் 4 வீரர்கள் பலியாகினர்.
2024 மே 4: பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப் படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 5 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
2024 ஜூன் 9: யாத்ரீகர்கள் சென்ற பேருந்தை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயமடைந்தனர்.
2024 ஜூன் 11,12: பயங்கரவாதிகளின் இரட்டை தாக்குதல்களில் 6 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
2024 ஜூலை 8: கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்கல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
2024 ஜூலை 16: தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications