டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் மோடியே பிரதமராக வேண்டும்.. 83% பேர் ஆதரவு தெரிவிப்பதாக டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியே பிரதமராக வேண்டும்: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு!- வீடியோ

    டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என 83 சதவீதம் பேர் கருத்து கணிப்பில் கூறியுள்ளனர்.

    நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இதில் யார் வெற்றி பெறுவர் என பல செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை நடத்தி வருகின்றன.

    அந்த வகையில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் டைம்ஸ் நவ் இணையத்தில் (ஆன்லைன்) கருத்து கணிப்பு நடத்தியது. இதில் லோக்சபா தேர்தலின் முடிவுகள் என்னவாக இருக்கும். எந்த முடிவாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன.

    யார் பிரதமர்

    யார் பிரதமர்

    இதில் 83.03 சதவீதம் பேர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளனர். 9.25 சதவீதம் பேரே காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர். பிரதமராக மோடி இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என 4.25 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

    வாக்கு

    வாக்கு

    அது போல் 3.74 பேர் மகா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என வாக்களித்துள்ளனர். பிரதமராக மீண்டும் யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 83 சதவீதம் பேர் மோடியே வர வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

    மற்றவர்கள்

    மற்றவர்கள்

    ராகுல் காந்தி பிரதமராக 8.33 சதவீதம் பேரே விரும்பியுள்ளனர். அதுபோல் மம்தா பானர்ஜிக்கு 1.44 சதவீதம் பேரும் மாயாவதிக்கு 0.43 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மற்றவர்கள் பிரதமராக வேண்டும் என 5.92 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

    சாதனை

    சாதனை

    மோடி அரசின் சாதனைகளாக ஏழைகளுக்கான வசதி என்று 34.39 சதவீதம் பேரும், ஜிஎஸ்டி என 29.09 சதவீதம் பேரும், தூய்மை இந்தியா என 18.68 சதவீதம் பேரும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என 17.84 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

    எது தோல்வி

    எது தோல்வி

    மோடி அரசின் பெரிய தோல்வி எது என்ற கேள்விக்கு ராமர் கோயில் கட்டாதது என 35.72 சதவீதம் பேரும், வேலையின்மை என 29.52 சதவீதம் பேரும், பண மதிப்பிழப்பு என 13.5 சதவீதம் பேரும், சகிப்புத்தன்மையின்மை அதிகரிப்பு என 12.9 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

    English summary
    In Times now over 80 per cent believe that the Narendra Modi government will come back to power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X