டைம்ஸ் நவ் சர்வே: ம.பியும் பாஜகவிற்குத்தான்.. ராஜஸ்தானிலும் தாமரைதான்.. கிலியில் காங்கிரஸ்!
2019 லோக் சபா தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பாஜக பெரிய வெற்றியை பெறும் என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பாஜக பெரிய வெற்றியை பெறும் என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லோக் சபா தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு இந்தியா முழுக்க தேர்தல் ஜுரம் பிடித்து இருக்கிறது. தொடர்ந்து வரிசையாக நிறைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது.
தற்போது லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு மாநில வாரியாக வெளியாகி உள்ளது.

உத்ரகாண்டில் என்ன
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி, உத்ரகாண்டில் 5 இடங்களில் பாஜக 5 இடங்களையும் வெல்லும். காங்கிரஸ் ஒரு இடங்களை கூட வெல்லாது. அதேபோல் மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

மத்திய பிரதேசத்தில் நிலை
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி, மத்திய பிரதேசத்தில் 29 இடங்களில் பாஜக 23 இடங்களை வெல்லும். காங்கிரஸ் 6 இடங்களை வெல்லும். மற்ற கட்சிகளுக்கு எந்த இடமும் கூட கிடைக்காது.

ராஜஸ்தானில் யாருக்கு வாய்ப்பு
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பின் படி, ராஜஸ்தானில் 25 இடங்களில் பாஜக 17 இடங்களை வெல்லும். காங்கிரஸ் 8 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்கும்.

பாஜக கெத்து
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் லோக்சபாவில் மிக முக்கியமான மாநிலங்கள் ஆகும். இந்த நிலையில் பாஜக இதில் அதிக இடங்களை வெல்லும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எல்லா தேர்தலிலும் இங்கு பெரிய பின்னடைவு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications