யு.கேவிலிருந்து வரும் பிரிட்டிஷ் மக்களுக்கு.. 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்.. இந்தியா பதிலடி
டெல்லி: இந்தியா வரும் பிரிட்டிஷ் குடிமக்கள் அனைவரும் 10 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேக்சின் போட்டு இருந்தாலும் இந்த கட்டுப்பாடுகள் பிரிட்டிஷ் மக்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக யு.கே விதித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு பதிலடியாக இப்போது மத்திய அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளில் யுகே தொடக்கத்தில் இருந்தே ஆசிய நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் எதிராக விதிமுறைகளை அறிவித்து வருகிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்-ஆஸ்டராசெனகா வேக்சினைத்தான் யுகே பயன்படுத்தி வருகிறது. இந்தியாவும் அதே வேக்சினைத்தான் கோவிஷீல்ட் என்ற பெயரில் பயன்படுத்தி வருகிறது.

கோவிஷீல்ட்
ஆனால் இந்த கோவிஷீல்ட் வேக்சினுக்கு அனுமதி அளிக்க யுகே தொடக்கத்தில் மறுத்துவிட்டது. பல மாதங்களுக்கு இந்தியாவின் கோவிஷீல்ட் வேக்சினுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. அதன்பின் இந்தியாவின் பல கட்ட கோரிக்கைக்கு பின் யுகே இந்தியாவின் கோவிஷீல்ட் வேக்சினுக்கு அனுமதி அளித்தது.

யுகே
ஆனால் கோவிஷீல்ட் வேக்சினுக்கு அனுமதி அளித்தாலும் கூட ஆசிய நாடுகளுக்கு இன்னும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தவில்லை. இந்தியாவில் கோவிஷீல்ட் வேக்சின் போட்டுவிட்டு யுகே சென்றாலும் கூட அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் யுகே தெரிவித்தது.அதன்படி இந்தியாவில் இருந்து வந்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், கொரோனா டெஸ்ட் சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று யுகே தெரிவித்தது.

கட்டுப்பாடு
அதேபோல் ஒவ்வொரு ஆசிய நாட்டிற்கும் ஏற்றபடி 10 நாட்கள் முதல் 20 நாட்கள் வரையிலும் கட்டுப்பாடுகளை யுகே விதித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் வேக்சின் போட்ட மக்களுக்கு மட்டும் தனிமைப்படுத்தல் விதி கிடையாது என்று யுகே தளர்வுகளை அறிவித்தது. இந்தியாவிற்கு எதிரான கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்த வேண்டும் என்று யுகேவிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால் யுகே இந்தியாவின் கோரிக்கையை ஏற்கவில்லை.

காலனி ஆதிக்கத்தின் நீட்சி
இதையடுத்து யுகேவின் இந்த செயல் காலனி ஆதிக்கத்தின் நீட்சி. யுகேவின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா விமர்சனம் செய்தது. இந்த நிலையில் புதிய திருப்பமாக இந்தியா வரும் பிரிட்டிஷ் குடிமக்கள் அனைவரும் 10 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா சோதனை
வேக்சின் போட்டு இருந்தாலும் இந்த கட்டுப்பாடுகள் பிரிட்டிஷ் மக்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு யுகேவில் இருந்து வரும் பிரிட்டிஷ் மக்கள் 72 மணி நேரத்திற்கு உள்ளாக எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் முடிவுகளை காண்பிக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான யுகேவின் செயலுக்கு பதிலடி தரும் விதமாக இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications