டைட்டானிக்கை பார்க்க போய்.. கடலில் மூழ்கிய நீர் மூழ்கி.. உள்ளே சிக்கிய புள்ளி! மோடிக்கு தெரிந்தவராமே
டெல்லி: டைட்டானிக் கப்பலை பார்க்க போய் கடலில் மூழ்கிய நீர் மூழ்கி கப்பலில் பிரதமர் மோடிக்கு தெரிந்த முக்கிய தொழிலதிபர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் விழுந்த துளை காரணமாக மொத்தமாக கப்பலும் மூழ்கியது. 52,310 டன் எடை கொண்ட இந்த கப்பல் நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்தது.
இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மனித வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். சர்வதேச அளவில் கடல் பயணத்தையே மாற்றியதுதான் டைட்டானிக் விபத்து.
கடல் ஆய்வு: இந்த டைட்டானிக் கப்பலின் சிதிலம் அடைந்த பாகங்களை பார்க்க பலருக்கும் ஆர்வம் உண்டு. இன்னும் பலர் ஆழ் கடலுக்குள் சென்று டைட்டானிக் கப்பலில் இருந்து பொருட்களை எடுத்து வந்து மீட்கவும் முயற்சிகள் செய்வது உண்டு.

அந்த வகையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate . இவர்களிடம் பல்வேறு சிறிய அளவிலான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தி டைட்டன்.
டைட்டானிக் கப்பலை பார்க்க நேற்று முதல்நாள் இரவு சென்ற இந்த கப்பல்தான் தற்போது காணாமல் போய் உள்ளது. இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் எடை 23,000lb (10,432 கிலோ) மற்றும் அவர்களின் கணக்கீடு படி, 13,100 அடி வரை ஆழத்தை எட்டும் திறன் கொண்டது.
3,800 மீ ஆழத்தில் உள்ள டைட்டானிக் இடிபாடுகளை காண்பது உட்பட, எட்டு நாள் பயணத்திற்கான டிக்கெட்டுகளின் விலை ரூபாய் 250,000 (£195,000) ஆகும். உலகில் உள்ள பயண நீர்மூழ்கி கப்பல்களில் ஒரு சில மட்டுமே இது போக 4 ஆயிரம் அடி வரை மூழ்கும் திறன் கொண்டது.
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளேது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.
காணவில்லை: ஏற்கனவே இந்த டைட்டன் இதற்கு முன் பயணிகள் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை சென்று வெற்றிகரமாக பார்த்துவிட்டு திரும்பி உள்ளது. ஆனால் இந்த முறை டைட்டானிக்கை பார்க்க சென்று டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் காணாமல் போய் உள்ளது.
கனடா கடல் பகுதியில் டைட்டானிக்கை பார்க்க சென்ற போது பாதி வழியில் இது மயமாகி உள்ளது. சிக்னல் கட் ஆன காரணத்தால் இது காணாமல் போய் உள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் இருந்து இந்த நீர் மூழ்கியை மீட்க மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
ராணுவ நீர்மூழ்கிக் கப்பலைப் போலல்லாமல், இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு குறைந்த சக்தி மட்டுமே உள்ளது மற்றும் அவற்றை ஏவுவதற்கும் திரும்பி மேலே வருவதற்கும் பெரிய எஞ்சின் எல்லாம் இல்லை. கீழே கொண்டு சென்று பாதி தூரத்தில் அப்படியே விடவும் அதன்பின் மேலே கொண்டு வருவோம் தனியாக ஆதரவுக் கப்பல் தேவை.
எப்படி இயங்கும்?: ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இதை அப்படியே கீழே போட்டுவிடுவார்கள். அது கடலுக்கு அடியில் மூழ்கி செல்லும். அதில் ஒரு கண்ட்ரோலர் மட்டும் இருக்கும். ஜாய் ஸ்டிக் போன்ற இந்த கண்ட்ரோலரை இயக்க வேண்டும்.
அதற்கு கூட ஜிபிஎஸ் பார்த்து இயக்க முடியாது. மேலே இருக்கும் கப்பலில் இருந்து சிக்னல் மூலம் மெசேஜ் அனுப்புவார்கள். அதை பார்த்து கீழே கப்பலை ஜாய் ஸ்டிக் மூலம் இயக்க வேண்டும். தானாக இதை இயக்கி மேலே கொண்டு வரவே முடியாது. அதனால்தான் இப்போது அந்த நீர் மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த கப்பலும் தப்பித்து மேலே வர முடியவில்லை. இந்த நீர் மூழ்கி மிகவும் குறுகியது, வெறும் 670 செ.மீ x 280 செ.மீ x 250 செ.மீ (22 அடி x 9.2 அடி x 8.3 அடி)ன் அளவு மட்டுமே கொண்டது. ஒரு விமானி மற்றும் நான்கு பயணிகள் - ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்றிச் செல்ல முடியும்.
டைட்டன் கப்பலில் இருந்த ஐந்து பேரில், இதுவரை நான்கு பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் - ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77 வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் உள்ளனர்.
இந்த கப்பலை மீட்க இன்னும் 30 மணி நேரம் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்கு பின் கப்பலுக்கு உள்ளே ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஹார்டிங் யார்?: இதில் பயணம் செய்து காணாமல் போன ஹார்டிங் உலகெங்கிலும் தனது ஆய்வுப் பயணங்களுக்கு பெயர் பெற்றவர். இவருக்கும் இந்தியாவிற்கும் முக்கிய தொடர்பும் கூட உள்ளது. நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு எட்டு காட்டு சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த மோடி அரசாங்கத்துடன் இணைந்து பணிகளை செய்தது இவர்தான். அந்த நிகழ்வில் இவர் மோடியுடன் நெருக்கமானதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தனது பிறந்தநாளில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் அந்த எட்டு சிறுத்தைகளை விடுவித்தார். அதற்கு பின் இருந்த மாஸ்டார்மைன்ட் ஹார்டிங். இவரையும் தற்போது காணவில்லை என்பதால் தீவிர தேடுதல் வேட்டைகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications