இந்தியாவில் கொரோனாவுக்கு 2-வது எம்.எல்.ஏ. பலி- திரிணாமுல் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு 2-வது எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் (வயது 60) கொரோனாவால் காலமானார்.
இந்தியா முழுவதும் கொரோனாவின் உக்கிர தாண்டவம் ஆயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது. கொரோனாவுக்கு தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் பலியானார்.

இந்தியாவிலேயே கொரோனாவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன். அவரது மரணம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோஷ்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர் கோஷ். அவரது மறைவு மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, 33 ஆண்டுகாலம் எங்களுடன் இருந்தவர். அர்ப்பணிப்புடனேயே கட்சிப் பணியையும் மக்கள் பணியையும் ஆற்றியவர். கோஷின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு?












Click it and Unblock the Notifications