குக்கர் சின்னம், சசிகலா விடுதலை- சு.சுவாமி ஏற்பாட்டில் அமித்ஷா, ஜேபி நட்டாவை சந்தித்த தினகரன்?
டெல்லி: பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஏற்பாட்டில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் களம் இப்போதே அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிடிவி தினகரன்
இன்னொரு பக்கம் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதும் டிடிவி தினகரனின் அமமுக இந்த கோதாவில் இன்னமும் குதிக்காமல் இருந்து வருகிறது.

திடீரென வந்த குக்கர் சின்னம்
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகும் வரை அமமுக காத்திருக்கக் கூடும் என தெரிகிறது. இருப்பினும் அமமுகவுக்கு ஏற்கனவே திடீரென குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது பல கேள்விகளையும் எழுப்பி இருந்தது.

அமித்ஷாவுடன் ஆலோசனை
ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் இருந்து டெல்லி சென்றார் டிடிவி தினகரன். டெல்லியில் ஜேபி நட்டா, அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் தினகரன்.

சு.சுவாமி ஏற்பாட்டில் சந்திப்பு?
பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஏற்பாட்டிலேயே இந்த சந்திப்புகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சந்திப்புகளில் தமிழக தேர்தல் நிலவரம், சசிகலா விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்களை பாஜக தலைவர்களுடன் தினகரன் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications