டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த மீட்டீங்.. பரபரப்பை எகிற வைத்த ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு
டெல்லி: டெல்லியில் முதல்வர் மு.க. ஸ்டாலினும், தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் திடீரென சந்தித்து பேசினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் கிங் மேக்கராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 உறுப்பினர்களை கொண்ட லோக்சபாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாஜக 240 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. அதேநேரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றிருந்தது.
ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் என்ற இலக்கை இந்த கூட்டணி கடந்திருந்ததால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவானது.
இதையடுத்து உடனடியாக மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கியது. இதற்கிடையே இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று பகல் 1 மணி அளவில் டெல்லி சென்றார். அதன் பின்னர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்ப டெல்லி விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அப்போது, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனையில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்ப விமான நிலையம் வந்திருந்தார். அப்போது இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர்.
அந்த தருணத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைப்போல மு.க. ஸ்டாலினையும் சந்திரபாபு நாயுடு வாழ்த்தினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "டெல்லி விமான நிலையத்தில், கருணாநிதியின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்.
அவருக்கு எனது வாழ்த்துகளை கூறியதோடு சகோதர மாநிலங்களான தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என்ற என் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன். சந்திரபாபு நாயுடு மத்திய அரசில் மிக முக்கியப் பங்காற்றுவார். தென் மாநிலங்களுக்காக வாதாடி, நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என நம்புகிறேன்" என்று கூறினார்.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications