பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
Recommended Video

டெல்லி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பழங்கால கோயில்களில் ஐம்பொன் சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கடத்தல் சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.

இடைக்கால தடை
எனினும் அவர் மீது நம்பிக்கை இல்லை என கூறி தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.

அரசாணை ரத்து
இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்துவது குறித்து கடந்த 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அன்றைய தினமே பொன் மாணிக்கவேல் ஓய்வு பெறுகிறார் என்பதால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அது போல் சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

பேரிடி
மேலும் பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் பிரிவு சிறப்பதிகாரியாக நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் அவர் மீண்டும் பதவியேற்றுக் கொள்வது குறித்து தமிழக அரசிடம் தெரிவிக்க தேவையில்லை என்று கூறியது. இது தமிழக அரசுக்கு பேரிடியாக இருந்தது.

இன்று மனு தாக்கல்
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி இன்று தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. தனக்கு கொடுக்கப்பட்ட ஓராண்டுக்குள் அனைத்து சிலைகளையும் மீட்பேன் என பொன் மாணிக்கவேல் சூளுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி! கடுமையாக வாதம் வைத்த போலீஸ்.. மனுதாரர் ட்விஸ்ட்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க












Click it and Unblock the Notifications