காசி தமிழ் சங்கமம் 2.0: 216 பேர் இன்று ரயிலில் பயணம்- ஆளுநர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
டெல்லி: காசி தமிழ் சங்கமம் 2.0 நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில் 216 பேருடன் வாரணாசி செல்லும் ரயிலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் உறவானது இந்தியாவின் பாரம்பரியமிக்க இரு கலாச்சாரங்களுக்கிடையே தொன்று தொட்டு வரும் ஒரு பந்தமாகும். நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும், காசி தமிழ் சங்கமத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாடு- வாரணாசி தொடர்பு: தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது பல்வேறு சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. ஆன்மிக கவிஞர் குமரகுருபரர் வாரணாசிக்கு சென்று அங்கேயே அவரது சமாதி அமைந்திருப்பது, மகாகவி பாரதியார் தனது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் காசிக்கு வந்து தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தது, 1819 ஆம் ஆண்டிலேயே நகரத்தார் சமூகத்தினரின் சத்திரம் ஒன்று அங்கு கட்டப்பட்டிருப்பது, தமிழகத்தில் வணங்கப்படும் தெய்வமான விசாலாட்சி அம்மனுக்கு அங்கு கோவில் அமைந்திருப்பது போன்ற பல்வேறு சான்றுகள் தமிழகத்திற்கும், காசிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விளக்கும் விதமாக அமைந்துள்ளன.
நாளை மறுநாள் முதல் காசி தமிழ் சங்கம்: இந்த தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கல்வி அமைச்சகத்தால் 17 டிசம்பர் 2023 முதல் 30 டிசம்பர் 2023 வரை காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது கட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் 2-ம் கட்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

காசி தமிழ் சங்கம்: கடந்த ஆண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்ச்சிக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்டோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள், வாரணாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணமாகச் சென்றனர், அப்போது அவர்கள் பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி உள்ளிட்ட வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆழமான அனுபவத்தைப் பெற்றனர். அவர்கள் கருத்தரங்குகளில் பங்கேற்றனர், கண்காட்சிகளைப் பார்வையிட்டனர், உள்ளூர் உணவு வகைகளை ருசித்தனர், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர், வரலாற்று மற்றும் சுற்றுலா ஆர்வமுள்ள இடங்களைப் பார்வையிட்டனர். கல்வி அமைச்சகம் இந்த திட்டத்தை வழிநடத்திய போதிலும், பங்கேற்பு அமைச்சகங்கள் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசின் பங்கு அதை சாத்தியமாக்குவதில் ஒருங்கிணைந்தது.
காசி தமிழ் சங்கமம் 2.0: கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தை மத்திய அரசு முதன்முறையாக நடத்தியது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் மேலும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது அதுபோலவே காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்விலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். இந்த முறையும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் முக்கிய ஆளுமைகள் பிரயாக்ராஜ், அயோத்தி, வாரணாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் சிறப்புரையாற்றுவார்கள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் போன்றவற்றையும் அவர்கள் கண்டுகளித்து ஆழமான அனுபவத்தை பெறுவார்கள்.

216 பேருடன் முதல் ரயில் இன்று புறப்பட்டது: காசி தமிழ்ச் சங்கமம் 2.0 விற்கு தமிழ்நாட்டிலிருந்து முதல் ரயில் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முதல் ரயிலில் 216 பேர் வாரணாசிக்கு பயணிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மெலும் பலர் வாரணாசிக்கு செல்ல இருக்கிறார்கள். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து: இதனிடையே பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில், காசி மீண்டும் ஒருமுறை பழமையான கலாச்சாரங்களின் கொண்டாட்டமான @KTSangamam-த்திற்கு மக்களை உற்சாகமாக வரவேற்க தயாராகிறது. இந்நிகழ்வு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு சான்றாகவும் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' உணர்வையும் வலுப்படுத்துகிறது என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications