தமிழகத்தில் பதிவு செய்தவர்களில் 34.9% பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டவர்கள்
டெல்லி: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்தவர்களில் இதுவரை 34.9% மட்டுமே போட்டுக் கொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்தவர்களில் 27.9% பேர்தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஜன.16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:

முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.18% பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டன. 0.002% தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உலக நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் பாதிப்பு குறைவாக உள்ள நாடு இந்தியாதான்.
முதல் நாளில் 2,07,229 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. உலக நாடுகளில் இந்தியாவில்தான் முதல்நாளில் கொரோனா தடுப்பூசி அதிகம் போடப்பட்டது. கடந்த 3 நாட்களில் மொத்தம் 3.81 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
நமது நாட்டில் தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்தவர்களில் 81% அளவில் போடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 71%, அருணாசல பிரதேசத்தில் 75% அளவுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் பதிவு செய்தவர்களில் 34.9%; பஞ்சாப்பில் 27.9% அளவுக்குதான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி கொரோனா பதிவு செய்தவர்களில் தடுப்பூசி போடப்படுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications