எதை அழிக்க முயன்றாரோ அதை வணங்கி.. அந்த பயம் இருக்கணும்... மோடியை எச்சரித்த காங்கிரஸ்..ஏன் தெரியுமா?
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்திய அரசியல் சாசனப் புத்தகத்தை கையில் எடுத்து வணங்கியதை முன்வைத்து விவாதங்கள் நடைபெறுகின்றன.
லோக்சபா தேர்தல் பிரசார களத்தில் அதிகம் பேசப்பட்டது அரசிய சாசனம் குறித்தும்தான். இந்திய தேர்தல் ஆணையமே அரசியல் சாசனத்தை எல்லாம் உங்க தேர்தல் பிரசாரத்தில் இழுத்துவிடக் கூடாது என கடிந்தும் கொண்டது.

அஸ்ஸாம் முதல்வரான பாஜகவின் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் தோற்ற பாஜகவின் லல்லு சிங் தொடங்கி பாஜகவினர் கோரஷாக, 400க்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றுவிட்டால் இந்தியாவின் அரசியல் சாசனத்தையே மாற்றி எழுதுவோம் என ஆவேசமாகப் பேசினர்.
இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்களும் பதிலடி கொடுத்தனர். பாஜகவுக்கு மட்டும் 400 இடங்கள் கிடைத்துவிட்டால் இந்திய அரசியல் சாசனத்தை நிச்சயம் ஒழித்துவிடுவார்கள்; அத்துடன் ஒடுக்கப்பட்ட- பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டையும் ஒழித்தே விடுவார்கள் எனவும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
இந்தியா கூட்டணியின் இந்தப் பிரசாரம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், அய்யய்யோ நாங்கள் அரசியல் சாசனத்தை மாற்றி எழுத மாட்டோம் என நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பதறிப் போய் மறுத்தனர். ஆனாலும் வாக்காளர்களிடையே இது எடுபடவில்லை என்பதுதான் லோக்சபா தேர்தல் முடிவுகள் பல தொகுதிகளில் வெளிப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நரேந்திர மோடி வருகை தந்தார். அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த இந்திய அரசியல் சாசனப் புத்தகத்தை தொட்டு வணங்கினார். பின்னர் அதை கையில் எடுத்தும் வணங்கினார். 2019-ம் ஆண்டும் இதே போல செய்தார் மோடி.
நரேந்திர மோடி, அரசியல் சாசனப் புத்தகத்தை வணங்கியதை தமது சமூக வலைதளப் பக்கத்தில் சுட்டிக்காட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, "நரேந்திர மோடி எந்த அரசியலமைப்பை அழிக்க முயன்றாரோ அதே அரசியலமைப்பிற்கு இன்று தலைவணங்ககிறார். அந்த பயம் இருக்கணும்..." என பதிவிட்டுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications