Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கினார்! அவரை உடனே சஸ்பெண்ட் பண்ணுங்க! சபாநாயகருக்கு பாஜக எம்பி பரபர கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய குரலாக ஒளிப்பவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றம் நடைபெறும் போது லோக்சபாவில் ஆளும் பாஜகவைத் தொடர்ச்சியாகக் கடுமையாக இவர் விமர்சித்து வருகிறார்.

To Ask Questions In Parliament Mahua Moitra Took Bribes alleges BJP MP Nishikant Dubey

இதற்கிடையே இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பத் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக நிஷிகாந்த் துபே என்ற பாஜக எம்பி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் லோக்சபா சபாநாயகருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

பரபர குற்றச்சாட்டு: இந்த விவகாரத்தில் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பப் பணம் மற்றும் பரிசுகளை மஹுவா மொய்த்ரா பெற்றதாகவும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனி தான் லஞ்சம் கொடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் மஹுவா மொய்த்ராவை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே இரண்டு பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர், "நாடாளுமன்றம் நடைபெறும்போதெல்லாம் மொஹுவா மொய்த்ரா மற்றும் சவுகதா ராய் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அவை நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு விவகாரத்தைக் கையில் எடுத்துத் தொடர்ந்து கூச்சல் குழப்பம் எழுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பணம் பெற்றுள்ளார்: இதை திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஒரு யுக்தியாகவே வைத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் சாதாரண மக்களின் பிரச்சினைகள் மற்றும் அரசு கொள்கைகள் குறித்து விவாதிப்பதைத் தடுக்கும் வகையில் அவர்கள் இப்படிச் செயல்பட்டு வருகிறார்கள். மஹுவா மொய்த்ரா லோக்சபாவில் கேள்விகளைக் கேட்கத் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பணம் பெறுகிறார். அவர் செய்வது ஏமாற்று வேலை" என்று பதிவிட்டுள்ளார்.

ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றை அதானி குழுமத்திடம் ஹிரானந்தானி குழுமம் இழந்துவிட்டது. மொய்த்ராவின் கேள்விகள் இந்த நிறுவனத்தின் நலனுக்காக இருந்துள்ளது" என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இதற்காக ரூ. 2 கோடி பணம் மற்றும், விலை உயர்ந்த ஐ-போன் போன்ற பரிசுப் பொருட்களையும் ஹிரானந்தானி தந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் சமயத்திலும் மொஹுவா மொய்த்ராவுக்கு ரூ. 75 லட்சம் தந்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொஹுவா மொய்த்ரா கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனியின் நலனுக்காகக் கேட்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை திரிணாமுல் எம்பி மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

திட்டவட்டமாக மறுப்பு: இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "போலி பட்டம் தொடங்கிப் பல உரிமை மீறல் நோட்டீஸ்கள் பாஜக தலைவர்கள் மீது நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது சபாநாயகர் முடிவெடுத்தவுடன் என் மீது சபாநாயகர் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதானி நிலக்கரி ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை உள்ளிட்டோரும் வழக்குப்பதிவு செய்வார்கள்" என்று எதிர்பார்க்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+