டெல்லி நோக்கி புறப்படும்.. 40000 பெண் விவசாயிகள்.. சர்வதேச மகளிர் தினத்தில் போராட்டம்!
டெல்லி; இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்துவதற்காக 40000 பெண் விவசாயிகள் செல்ல உள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் செய்து வருகின்றனர் .

டெல்லியில் நடந்து வரும் இந்த விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நீண்ட போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை இந்திய அளவில் பேசப்பட்டு வந்த போராட்டம் நேற்று சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தது.
ஒவ்வொரு நாளும் இந்த போராட்டத்தில் ஒவ்வொரு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்துவதற்காக 40000 பெண் விவசாயிகள் செல்ல உள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெண் விவசாயிகள் டெல்லி நோக்கி இன்று செல்கிறார்கள். சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். டெல்லி எல்லையை சுற்றி நடக்கும் இந்த போராட்டத்திற்கு இவர்கள்தான இன்று தலைமை வகிக்க போகிறார்கள்.
இந்த போராட்டத்தை ஒவ்வொரு பகுதிகளிலும் இன்று பெண் விவசாயிகள் முன்னெடுக்க உள்ளனர்.மொத்தம் 500 பேருந்துகள், 600 மினி பேருந்துகள், 115 டிரக்குகள், 200 சிறிய வாகனங்களில் பெண்கள் எல்லோரும் டெல்லி எல்லைக்கு சென்று உள்ளனர். இதனால் இன்று விவசாய போராட்டம் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications