டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜஸ்தானில் கெலாட்டை ஆதரிக்குமாறு நெருக்கமான காங். எம்எல்ஏக்களிடம் வசுந்தரா ராஜே பேசினாரா? பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தானில் நெருக்கடியில் சிக்கியுள்ள முதல்வர் அசோக் கெலாட்டை ஆதரிக்குமாறு தனக்கு நெருக்கமாக உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா பேசியதாக பாஜக கூட்டணி பேசியருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், அக்கட்சியின் முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட்டுக்கும் அதிகார மோதல் முற்றியது. இதனால் அவர் அசோக் கெலாட்டுக்கு எதிராக 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் கடந்த 14ந்தேதி சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்,.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த சூழலில் பாஜகவில் தான் சேரப்போவதில்லை என்று சச்சின் பைலட் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவே தான் தொடருவேன் என்றும் அறிவித்துள்ளார்.

தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிரான வழக்கு.. ராஜஸ்தான் ஹைகோர்ட்டில் இன்று விசார்ணை தகுதி நீக்க நோட்டீஸுக்கு எதிரான வழக்கு.. ராஜஸ்தான் ஹைகோர்ட்டில் இன்று விசார்ணை

சமாதான முயற்சி

சமாதான முயற்சி

இதற்கிடையே ராகுல் காந்தி, சச்சின் பைலட்டிற்கு உரிய முக்கியத்துவம் அளித்து சமாதானம் செய்ய முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா என்ற பரபரப்பு நிலவுகிறது.

பாஜக கூட்டணி கட்சி குற்றச்சாட்டு

பாஜக கூட்டணி கட்சி குற்றச்சாட்டு

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு உதவ முயற்சிப்பதாக ராஜஸ்தானில் உள்ள பாஜகவின் கூட்டணி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியின் லோக்சபா எம்பியான ஹனுமான் பெனிவால் இதுபற்றி டுவிட்டரில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

கெலாட்டுக்கு உதவுங்கள்

கெலாட்டுக்கு உதவுங்கள்

"முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அவருக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்து அசோக் கெலாட்டை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.. சிகார் மற்றும் நாகூரில் உள்ள ஒவ்வொரு ஜாட் எம்.எல்.ஏ.வையும் அழைத்து சச்சின் பைலட்டிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டிருக்கிறார், இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது, என்று ஹனுமான் பெனிவால் குறிப்பிட்டுள்ளார். வசுந்தரா ராஜே கெலாட்டுக்கு உதவுவதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உதவியாளர்கள் கூறியுள்ளனர், எனவே அசோக் கெலாட்டின் அரசு கவிழாது என்றும் கூறினார்..

இப்படி பேச வேண்டாம்

இப்படி பேச வேண்டாம்

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் புனியா இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். வசுந்தரா ராஜே எங்கள் மரியாதைக்குரிய தலைவர் அவரை பற்றி இப்படியெல்லாம் அறிக்கை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார்.

English summary
A BJP ally in Rajasthan has alleged that former Chief Minister Vasundhara Raje, Asked Congress MLAs To "Support Ashok Gehlot"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X