விவசாய குளத்தில் 7 பொக்கிஷம்.. 20 வருடங்களுக்கு பிறகு "உயிர்த்தெழுந்த" அதிசய மீன்! வியந்த விஞ்ஞானிகள்
டெல்லி: ஒரு மீன் இனமே அழிந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்திருந்த நேரத்தில், திடீரென அந்த அரிய மீன் இனம் 20 வருடங்கள் கழித்து உயிருடன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... அதுவும் ஒரு விவசாய குளத்தில் இந்த மர்மமான "உயிர்த்தெழுதல்" சம்பவம் நடந்து, உலக வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது என்ன மீன்?
உலக மீன்வள, மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந் தேதி இன்று உலகம் முழுவதிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. மீன்வளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கொண்டாடுவதும் தான் இதன் முக்கிய நோக்கமாகும்.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உலக மீன்வளம் மற்றும் நீருயிரின் வளர்ப்பின் நிலை 2024ம் ஆண்டு அறிக்கையின்படி உலகளாவிய பிடிப்பு மீன்வளம் 92.3 மில்லியன் டன்களை எட்டியிருக்கிறது. இதில் கடல் மீன்பிடிப்பு 81 மில்லியன் டன்களாகவும், உள்நாட்டு மீன்பிடிப்பு 11.3 மில்லியன் டன்களாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது
உலக மீன்வள நாள்
உலக மீன்பிடி உற்பத்தியில் சீனா முன்னணியில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா, பெரு மற்றும் ரஷியா கூட்டமைப்பு போன்ற நாடுகள் மீன்பிடி உற்பத்தியில் இருந்து வருகின்றன.
சமீப காலமாகவே மீன் வளத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டு வருகிறது.. கடல்நீர் வெப்பமடைதல், அமிலமயமாதல், அசாதாரணமான வானிலை சம்பவங்கள், காலநிலை மாற்றம், பிளாஸ்டிக் மாசுபாடு உள்ளிட்டவையே இதற்கு பிரதான காரணங்களாக உள்ளன.. எனவேதான் மீனவளத்தினை பாதுகாத்திட வேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது..
மோமோ கிளாடியா அரிய வகை மீன்
நிலையான மீன்பிடி முறைகள், ஆரோக்கியமான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நலனை கருத்தில் கொண்டுதான் உலக மீன்வள தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. வருடந்தோறும் நவம்பர் 21ம் தேதி இந்த மீனவர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் மீன்வளத்தின் எதிர்காலத்தையும், அவற்றை சார்ந்திருக்கும் சமூகங்களையும் உறுதிப்படுத்தி, கடலோர கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது..
குபீர்னு வந்த அரிய வகை மீன்
இந்நிலையில், பொலிவியாவில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. அதாவது 20 வருடங்களாக காணாமல் போன அரியவகை மீன் இனம் குபீரென கிளம்பி வந்துவிட்டதாம்..!
இந்த வகை மீனுக்கு 'மோமா கிளாடியா' (Moema claudiae) என்று பெயர்.. பொலிவியாவில் உயிருடன் இந்த வகை மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு பொக்கிஷம்
அதாவது விவசாய நிலங்களுக்கு நடுவே உள்ள ஒரு சிறிய குளத்தில் இந்த அரியவகை 'மோமா கிளாடியா' பருவகாலக் கொல்லி மீன் (Seasonal Killifish) சிக்கியுள்ளது.
இதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டுள்ளனர். இதன் பழைய இயற்கை வாழ்விடங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதால், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்த குறிப்பிட்ட மீன் இனத்தை விஞ்ஞானிகளால் கண்டறிய முடியவில்லை. அதனால் இந்த மீன் இனமே முற்றிலுமாக அழிந்துவிட்டதாக (Extinct) நம்பப்பட்டு வந்தது.
விஞ்ஞானிகள் ஆச்சரியம்
இந்நிலையில்தான் இந்த மீன் மீண்டும் கிடைத்துள்ளது.. தொலைந்துபோனதாகக் கருதப்பட்ட ஒரு இனத்தை அதன் இயற்கையான வாழ்விடத்திலேயே பாதுகாப்பதற்கான பொன்னான வாய்ப்பாக ஆராய்ச்சியாளர்களுக்கு அமைந்துள்ளது. முதன்முறையாக இந்த மீனை போட்டோ எடுத்து, அதன் செயல்பாடு, சூழலியல் பற்றின புதிய தகவல்களையும் சேகரித்து வருகிறார்கள்..
இந்த 'மோமா கிளாடியா' என்பது சாதாரண மீன்கள் கிடையாது.. இவை பருவகால மீன்கள் என்பார்கள்.. அதாவது வருடத்தில் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே தண்ணீரில் இருக்கும்.. எனவே, தற்காலிக குளங்களை நம்பியே வாழக்கூடியவை.
விவசாய குளத்தில் 7 பொக்கிஷம்
இத்தகைய சிறிய மற்றும் மென்மையான வாழ்விடங்கள், விவசாயம் உள்ளிட்ட மனித ஆக்கிரமிப்பால் எளிதில் அழிக்கப்படுகின்றன...
இந்த மோமா கிளாடியா' மீன் சிக்கிய அதே சிறிய குளத்தில், மேலும் 6 வகையான பருவகால கில்லிஃபிஷ் இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விஞ்ஞானிகளை மேலும் திக்குமுக்காட வைத்துள்ளது.. இந்த ஒரே குளத்தில் இத்தனை ஆச்சரியங்களா? என்று விஞ்ஞானிகள் வியந்து போயிருக்கிறார்களாம். அத்துடன், அதற்கான ஆராய்ச்சிகளையும் உடனடியாக துவங்கி உள்ளார்கள்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications