டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காந்தி நினைவு தினத்தன்று..விவசாய சட்டங்களுக்கு எதிராக.. உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கும் விவசாயிகள்

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று காந்தி நினைவு தினத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர்,

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாகத் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் குளிர் உட்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்,

உண்ணாவிரதப் போராட்டம்

உண்ணாவிரதப் போராட்டம்

காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகிய கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெறுவதாகவும் அரசு பொய் மற்றும் வன்முறையை மக்களிடையே பரப்புவதாகவும் விவசாய தலைவர்கள் தெரிவித்தனர்.மேலும், "நேற்று நாங்கள் அமைதியாகவே போராடினோம், இன்றும் நாங்கள் அமைதியாகவே போராடுவோம், எப்போதும் நாங்கள் அமைதியாகவே போராடுவோம்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்,

அமைதியாகவே போராடுவோம்

அமைதியாகவே போராடுவோம்

காந்தியின் உண்மை மற்றும் அகிம்சையை ஆகிய கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெறுவதாகவும் அரசு பொய் மற்றும் வன்முறையை மக்களிடையே பரப்புவதாகவும் விவசாய தலைவர்கள் தெரிவித்தனர்.மேலும், "நேற்று நாங்கள் அமைதியாகவே போராடினோம், இன்றும் நாங்கள் அமைதியாகவே போராடுவோம், எப்போதும் நாங்கள் அமைதியாகவே போராடுவோம்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்,

திடீர் குழப்பம்

திடீர் குழப்பம்

இரண்டு மாதமாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தினாலும், கடந்த சில நாட்களாகவே விவசாயிகளின் போராட்டத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக, குடியரசு தின டிராக்டர் பேரணியில் திடீரென்று ஏற்பட்ட குழப்பத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 60க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.

கூடாரங்கள் சேதம்

கூடாரங்கள் சேதம்

அதேபோல நேற்றும் டெல்லி-ஹரியானா எல்லையிலுள்ள சிங்கு பகுதியில் மர்ம நபர்கள் விவசாயிகளின் கூடாரங்களைச் சேதப்படுத்த முயன்றனர். இதில் ஒரு காவலர் காயமடைந்தார். இது தொடர்பாக 22 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குழப்பங்கள் நிலவினாலும், விவசாய சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

English summary
Farmer groups protesting for the past two months against the Centre's new agricultural laws will observe "Sadbhavna Diwas" on Mahatma Gandhi's 73rd death anniversary today with a day-long fast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X