சீதாராம் யெச்சூரி மறைவு: இரங்கல் தெரிவித்த விஜய்! “இடதுசாரிகளின் ஒளிவிளக்கு” புகழாரம் சூட்டிய மோடி!
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று காலமானார். அவருக்கு வயது 72. நிமோனியா காய்ச்சலால் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி சுவாசக் கருவிகளின் உதவியுடன் சுவாசித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர் சீதாராம் யெச்சூரி. 1975-ல், டெல்லி ஜேஎன்யுவில் யெச்சூரி மாணவராக இருந்தபோது, எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், சீதாராம் யெச்சூரி உடலை மருத்துவ மாணவர்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அவரின் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். யெச்சூரி மறைவை அடுத்து முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜய் இரங்கல்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் எக்ஸ் தளப் பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் இரங்கல்: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய அரசியலின் ஜாம்பவான் சீதாராம் யெச்சூரி உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. மாணவ செயற்பாட்டாளர் தொடங்கி நாடாளுமன்றவாதி வரையிலான அவரது பயணத்தில், அரசியலில் தனது அழியாத முத்திரையை பதித்தார். அவரது குடும்பத்தினருக்கும் எனது அனுதாபங்கள். பிரியாவிடை தோழர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்: பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "சீதாராம் யெச்சூரியின் மறைவை அறிந்து கவலையடைந்தேன். இடதுசாரி கட்சிகளின் முன்னணி ஒளிவிளக்காக திகழ்ந்த அவர், அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திறமையைப் பெற்றிருந்தார். செயல்திறன் மிக்க ஒரு நாடாளுமன்றவாதியாகவும் அவர் முத்திரைப் பதித்தார். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி." எனத் தெரிவித்துள்ளார்.
மாயாவதி இரங்கல்: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு தேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நேசத்துக்குரிய நபர். அவரது குடும்பத்தினர் மற்றும் நேசத்துக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர்களுக்கு இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை இறையருள் வழங்கட்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications