இந்தியா மீதான தாக்குதலை உடனே நிறுத்துங்கள்.. கண் சிவந்த அமெரிக்கா! பாகிஸ்தானுக்கு உத்தரவு
டெல்லி: இந்தியா மீது அறிவிக்கப்படாத போரை பாகிஸ்தான் தொடங்கியிருக்கிறது. இதனால் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், உடனடியாக இந்த தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.
இந்தியாவின் வட மற்றம் வட மேற்கு மாநிலங்களில் பாகிஸ்தான் ஏவுகணைகளை கொண்டும், ட்ரோன்களை கொண்டும் தாக்குதலை தொடங்கியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியிருக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் பகுதி மீதும் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து பிகானேர், ஜெய்சல்மார், ஸ்ரீ கங்காநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருகிறது. பஞ்சாப் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கும் பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானின் இந்த அறிவிக்கப்படாத தாக்குதல் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. எனவே, பாகிஸ்தான் இதுபோன்று செயல்படுவது பதற்றத்தை அதிகமாக போரை தூண்டும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளதாக அரபு நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தியா மேற்கொண் ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் கூறுகின்றன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications