ஆசையாக ரூ.1.17 கோடிக்கு விஐபி கார் நம்பரை ஏலம் எடுத்த ஹரியானா நபர்! 8888-ல் நடந்த சர்ப்ரைஸ் ட்விஸ்ட்
டெல்லி: ஹரியானாவில், வாகனங்களுக்கான விஐபி நம்பர்களுக்கான ஆன்லைன் ஏலத்தில், ரூ. 1.17 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு கார் எண்ணை ஏலம் எடுத்தவர், அந்தத் தொகையை செலுத்த தவறியதால், இப்போது மாநில அரசின் தீவிர விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். என்ன நடந்தது தெரியுமா?
ஹரியானாவில் வாகனங்களுக்கு வழங்கப்படும் விஐபி மற்றும் 'பேன்சி' பதிவு எண்கள் ஆன்லைன் மூலம் வாரந்தோறும் ஏலம் விடப்படுவது வழக்கமாகும்.. இதில், அதிகம் விரும்பப்படும் நம்பர்களுக்கு செம டிமாண்டு இருக்கும்.. இந்த கடுமையான போட்டிதான் ஏலத்தை சூடு பிடிக்க வைக்கும்.

அந்த வகையில், கடந்த வாரமும் ஒரு ஏலம் நடந்துள்ளது.. ஆப்போது ஹெச்.ஆர்.88 பி 8888' என்ற பதிவு எண், மொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த ஒரு நம்பருக்காக மொத்தம் 45 பேர் போட்டியிட்டார்கள்..
ஏலம் - விஐபி கார் நம்பர்
இறுதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் 'ரோமுலஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவன இயக்குநர் சுதிர் குமார் 1.17 கோடி ரூபாய் என்ற அதிரடி தொகையை ஏலமாக அறிவித்து வெற்றி பெற்றார்.. இதன் மூலம், இந்த பதிவு எண் இந்தியாவின் இதுவரையிலான மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட் என்ற பெருமையையும் பெற்றுவிட்டது.
ஆனால், ஏல விதிகளின்படி 2 நாட்களுக்குள் செலுத்த வேண்டிய தொகையை சுதிர் குமார் குறிப்பிட்ட கால எல்லைக்குள் செலுத்தவில்லை... இதனால் போக்குவரத்து துறை அந்த ஏலத்தை ரத்து செய்துவிட்டது.. 2 நாட்களுக்குள் கட்டணத்தை டெபாசிட் செய்யாததால், எனவே அவரது பாதுகாப்பு தொகையான ரூ.11,000 தானாகவே பறிமுதல் செய்யப்பட்டது.
ஏலத்தொகை
அதுமட்டுமல்ல, 1.17 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஏலத்துக்கு முன்வைத்த நபரின் வருமான மூலங்கள் மற்றும் சொத்து மதிப்பு குறித்து சந்தேகமும் எழுந்துள்ளது.
எனவே, சுதிர் குமாரின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, ஒரு ஆடம்பர பதிவு எண் ஏலம் இப்போது பெரிய விசாரணையாக மாறியுள்ளது. காருக்கு 'ஃபேன்சி' நம்பரை வாங்க போய், இப்போது வசமாக மாட்டிக் கொண்டு விழிக்கிறார் சுதிர் குமார்.
'8888' என்ற நம்பருக்கு ஆசைப்பட்டு
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் அனில் விஜ் சொல்லும்போது, "நாங்கள் விஐபி நம்பரை ஏலம் மூலம் வழங்கி வருகிறோம்.. பலரும் '8888' என்ற நம்பருக்கு ஆசைப்பட்டு ஏலம் எடுத்தனர். ஆனாலும் அதிக விலைக்கு ஏலம் எடுத்து ஏலத்தில் வென்ற பிறகு, சுதிர் குமார் அந்த தொகையை கட்டவில்லை. எனவே அதற்கு பதிலாக, அவர் தன்னுடைய பாதுகாப்பு வைப்புத் தொகையான ரூ.11,000 ஐ பறிமுதல் செய்ய அனுமதித்தார்.
உதவிக்காக அரசாங்கம் வருமான வரித்துறையை அணுகும்.. ஏலதாரர்கள் தங்கள் நிதி வசதிகளுக்கு அப்பால் விலைகளை உயர்த்தாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். இது ஏல முறையை சீர்குலைத்து, தீவிர பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்துகிறது. ஏலத்தொகைக்கு இணையான நிகர மதிப்பு சுதிர் குமாரிடம் உள்ளதா? என்பதை சரிபார்க்க அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது.
HR88B8888 என்ற மதிப்புமிக்க நம்பர், மீண்டும் ஏலத்திற்குள் வரும்.. இதனால் இன்னொரு சுற்று ஏலம் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications