போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ்
சென்னை: இந்த காலகட்டத்தில் எங்குத் திரும்பினாலும் நாம் போர் குறித்த தகவல்களையே பார்க்க வேண்டி இருக்கிறது. வளைகுடா, உக்ரைன் என வரிசையாகப் போர்களே வெடித்து வருகிறது. இந்த போர்க்களத்திற்குச் செல்லும் வீரர்கள், எப்போதும் துப்பாக்கி, ஆயுதங்களோடு சேர்ந்து ஆணுறைகளையும் கையோடு எடுத்துச் செல்வார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
போர்க்களம் என்றாலே நம் கண்ணுக்கு முன்னால் ரத்தமும், குண்டுகளும், துப்பாக்கிகளும்தான் வந்து நிற்கும். ஆனால், அந்த மரணப் போராட்டங்களுக்கு இடையிலும் ராணுவ வீரர்கள் தங்கள் சீருடைப் பைகளில் எப்போதும் ஒரு பொருளைத் தவறாமல் வைத்திருப்பார்கள். அது ஏதோ துப்பாக்கி, ஆயுதம், பணம் எல்லாம் இல்லை.. அது வேறு எதுவும் இல்லை.. காண்டம் அதாவது ஆணுறைகள்.

ஆணுறைகள்
இதைக் கேட்டவுடன் பலருக்குச் சிரிப்போ அல்லது ஆச்சரியமோ வரலாம். ஆனால், ஒரு ராணுவ வீரருக்கு இது வெறும் குடும்பக் கட்டுப்பாடு சாதனம் மட்டுமல்ல; அவனது உயிரைக் காக்கும் விஷயம் கருவி என்றே சொல்லலாம்.
எந்தவொரு போராக இருந்தாலும் களத்தில் வீரர்களின் முதல் எதிரி எதிரிநாட்டு ராணுவத்தினர் அல்ல.. அங்கிருக்கும் தட்பவெப்பநிலைதான். குறிப்பாக, புழுதி பறக்கும் பாலைவனங்களிலோ அல்லது சேறு நிறைந்த காடுகளிலோ துப்பாக்கிகளைப் பராமரிப்பது மிகப்பெரிய சவால். துப்பாக்கியில் குண்டு வெளியே வரும் குழலுக்குள் ஒரு சிறு மணல் துகள் புகுந்துவிட்டால் கூட, மிக முக்கியமான நேரத்தில் துப்பாக்கி வேலை செய்யாமல் போகலாம்.
துப்பாக்கிகள்
இந்தச் சிக்கலைத் தவிர்க்க, வீரர்கள் காண்டம்களைத் துப்பாக்கிக் குழலின் நுனியில் ஒரு கவசம் போல வைத்து மூடிக் கொள்வார்கள்.. சண்டைக்குத் தயாராகும் போது அதை எடுத்துவிட்டுச் சுடுவார்கள். எதிரி சட்டென வந்துவிட்டால் எப்படிச் சுட முடியும்.. அதை எடுக்க எல்லாம் டைம் இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். ஆனால், அந்த ஆணுறை மிக மெல்லியதாக இருப்பதால், எதிரி தென்படும்போது அதை அகற்றாமலேயே சுட முடியும். குண்டு பாயும்போது அது காண்டமை கிழித்துக்கொண்டு தடையின்றி பாயும்!
பாதுகாக்கும்
துப்பாக்கிக்கு மட்டுமின்றி, வீரர்களின் தகவல்தொடர்பு சாதனங்களுக்கும் இது ஒரு சிறந்த பாதுகாவலனாக இருக்கிறது. போர்க்களத்தில் வரைபடங்கள், பேட்டரிகள் மற்றும் தீப்பெட்டிகள் ஆகியவை மழையிலோ அல்லது ஆற்று நீரிலோ நனைந்துவிட்டால் அது ஒட்டுமொத்தப் படைக்கும் அது ஆபத்தாக முடியும். தவறான இடத்திற்குச் சென்று மாட்டுவது கிட்டத்தட்ட நாமே நமது சவக்குழியை வெட்டுவது போலத் தான். எனவே, இந்த சாதனங்களைப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.
அதற்கும் ஆணுறைகள் கை கொடுக்கும். அதை ஒரு தற்காலிக 'வாட்டர் புரூஃப்' பைகளாக வீரர்கள் மாற்றிக் கொள்கிறார்கள். இதில் பொருட்களைப் போட்டு முடிச்சுப் போட்டுவிட்டால், அது நீருக்கு அடியில் சென்றாலும் உள்ளிருக்கும் பொருட்கள் நனையாது. இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 1971 போரில் கூட ஆணுறைகளை வைத்தே இந்தியா பல போர்த் தந்திரங்களைக் கையாண்டதாகவும் சொல்லப்படுகிறது.
கூச்சப்படும் பொருள்
கடற்படை வீரர்கள் வெடிமருந்துகளை நீரில் நனையாமல் எடுத்துச் செல்லவும், காயங்கள் ஏற்பட்டால் தொற்று ஏற்படாமல் தடுக்க முதலுதவி சாதனமாகவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர். நவீன மருத்துவ வசதிகள் கிடைக்காத போர் சூழலில், தற்காலிக மருத்துவக் கையுறைகளாகவும் இவை உருமாறுகின்றன. நம்ம ஊர் மெடிக்கல் ஷாப்பில் கேட்பதற்கே கூச்சப்படும் ஒரு பொருள், எல்லையில் எதிரிகளை எதிர்கொள்ளும் வீரர்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications